மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி பரிதாப உயிரிழப்பு!
கொழும்பு - குருவல வீதியில் இடம்பெற்ற விபத்தில் 32 வயதுடைய இளைஞர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.
இந்த விபத்து நேற்று (11.04.2026) இடம்பெற்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாதுக்க, மதுலாவ சந்தியிலிருந்து லியன்வல சந்தி நோக்கி அதிவேகமாக பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, குருவல பகுதியில் வீதியோரமாகச் சென்றுகொண்டிருந்த பாதசாரி மீது எதிர்பாராத விதமாக மோதியதால் இந்த விபத்து ஏற்பட்டுள்ளது.
இந்த விபத்தில் பாதசாரியும், மோட்டார் சைக்கிளை செலுத்திய நபரும் பலத்த காயமடைந்தனர்.
ஒருவர் உயிரிழப்பு
அங்கிருந்தவர்களின் உதவியுடன் மீட்கப்பட்ட இருவரும் உடனடியாக ஹோமாகம வைத்தியசாலையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டனர். எனினும், சிகிச்சை பலனின்றி பாதசாரி உயிரிழந்துள்ளார்.

உயிரிழந்தவர் பாதுக்க பகுதியைச் சேர்ந்த 32 வயதுடைய இளைஞர் என அடையாளம் காணப்பட்டுள்ளார்.
காயமடைந்த மோட்டார் சைக்கிள் ஓட்டுநருக்கு தொடர்ந்து வைத்தியசாலையில் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இந்த சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பாதுக்க பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
கப்பல்களுக்கு சுங்கக் கட்டணம் வசூலிக்கும் ஈரான்... இந்தியாவிடமிருந்து எவ்வளவு வசூலிக்கிறது? News Lankasri