மோட்டார் சைக்கிள் மோதி பாதசாரி மரணம்
குருநாகல் நகரை அண்மித்த வாரியபொல - கும்புக்கெடே வீதியில் இடம்பெற்ற விபத்தொன்றில் பாதசாரியொருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த விபத்துச் சம்பவம் இன்று (24.5.2026) இடம்பெற்றுள்ளது.
கும்புக்கெடே நோக்கி பயணித்த மோட்டார் சைக்கிள் ஒன்று, வீதியைக் கடக்க முயன்ற பாதசாரி மீது மோதியதில் இந்த விபத்து நேர்ந்துள்ளது.
மேலதிக விசாரணை
விபத்தில் பலத்த காயமடைந்த பாதசாரி வாரியபொல மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
எனினும் சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்துள்ளதாக மருத்துவமனை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

உயிரிழந்தவர் வாரியபொல பகுதியைச் சேர்ந்த 85 வயதுடையவர் என தெரியவந்துள்ளது.
விபத்துடன் தொடர்புடைய மோட்டார் சைக்கிள் ஓட்டுநர் சந்தேகத்தின் பேரில் கைது செய்யப்பட்டுள்ளதுடன் வாரியபொல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.