கிளிநொச்சியில் 22 கால்நடைகளை அனுமதியின்றி கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது
கிளிநொச்சி - அக்கரையான் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட முக்கம்பன் பகுதியில் இருந்து பார ஊர்தி மூலம் அனுமதி பத்திரம் எதுவும் இன்றி 22 கால்நடைகளை கொண்டு செல்ல முற்பட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
நீதிமன்றில் முன்னிலை
நேற்று (24.05.2026) கிளிநொச்சி மாவட்ட குற்றத் தடுப்புபொலிஸ் பிரிவினருக்கு கிடைக்கப்பெற்ற தகவலுக்கு அமைவாக முகமாலை பகுதியில் மேற்கொள்ளப்பட்ட வீதி சோதனையின் மூலம் குறித்த வாகனம் மடக்கிப் பிடிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் 22 கால்நடைகளையும் பொலிஸார் மீட்டுள்ளதுடன் குறித்த பார ஊர்தியின் 43 வயதுடைய சாரதி பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இந்நிலையில், குறித்த சாரதியை, கிளிநொச்சி நீதிமன்றத்தில் முற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக கிளிநொச்சி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
செவ்வாய் - குரு உருவாக்கும் திரிஏகாதச யோகம்... ஜூன் மாதத்தில் இந்த ராசிகளுக்கு பணமழை உறுதி! Manithan
தமிழ்நாட்டில் அதிக 100 கோடி வசூல் திரைப்படங்களை கொடுத்த நடிகர்கள்.. முதலிடத்தில் யார் தெரியுமா? Cineulagam