நாடளாவிய ரீதியில் இடம்பெற்றுள்ள எரிவாயு விநியோகம்(Photos)
கிளிநொச்சியில் எரிவாயு சிலிண்டர் விநியோகம் அமைதியான முறையில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.
கிளிநொச்சி - கரடிபோக்கு சந்தியை அண்மித்த பகுதியில் அமைந்துள்ள லிட்ரோ நிறுவன அலுவலகத்தில் வைத்தே எரிவாயு சிலிண்டர்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.
பொதுமக்களும் நீண்ட வரிசைகளில் அமைதியாக காத்திருந்து இன்றைய தினம்(25) சிலிண்டர்களை பெற்று சென்றுள்ளனர்.
மக்கள் சிரமம்
நாட்டில் பொருளாதார நெருக்கடி நிலை உச்சக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் எரிபொருட்களை பெற்றுக்கொள்ள மிகுந்த சிரமங்களை எதிர்கொண்டனர்.
மிகப்பெரிய பிரச்சினையாக எரிபொருள் தட்டுப்பாடானாது உச்சகட்டத்தை எட்டியுள்ள நிலையில் மக்கள் தமது அன்றாட தேவைகளை நிறைவேற்றிக்கொள்ள சிரமபட்டனர்.
பலவிதமான இன்னல்கள், போரட்டங்கள், அரசியல் மாற்றங்கள் என்பவையும் இதற்கிடையில் நிகழ்ந்தது.
எரிபொருட்கள் விநியோகம்
தற்போது நீண்ட நாட்களின் பின் எரிபொருள் விநியோகமானது இடம்பெற ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் பல்வேறு பிரதேசங்களில் பெட்ரோல் விநியோகமானது வாகன கடைசி இலக்கங்களின் அடிப்படையில் வழங்கப்பட்டு வருகின்ற நிலையில் தற்போது எரிவாயு சிலிண்டர் விநியோகம் சீராக இடம்பெற்று வருகின்றமையும் குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி மற்றும் யாழ்பாணத்தில் நீண்ட நாட்களின் பின் எரிபொருள் விநியோகம்(Photos) |
திருகோணமலை
திருகோணமலையில் நீண்ட நாட்களின் பின் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிகப்பட்டுள்ளன.
திருகோணமலை - தம்பலகாமம் பிரதேச செயலக பிரிவுக்குட்பட்ட சிரிஜ் நகர் 97 ஆம் கட்டை சந்தியிலேயே இன்று(25) மாலை லிட்ரோ எரிவாயு விநியோகிக்கப்பட்டுள்ளது.
சுமார் இரண்டு மாதங்களூக்கு பின் சமையல் எரிவாயு வினியோகிக்கப்பட்டதாக மக்கள் தெரிவித்துள்ளனர்.
மின்சார பட்டியல் படி விநியோகம்
சுமார் 850 எரிவாயு சிலிண்டர்கள் இதன்போது மே மாத மின்சார பட்டியலின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அடை மழையிலும் மிக நீண்ட வரிசையில் காத்திருந்து எரிவாயு சிலிண்டர்களை பெற்று சென்றுள்ளனர்.
செய்தி: ஹஸ்வர்
மட்டக்களப்பு
மட்டக்களப்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை சீராக இடம்பெற்றுள்ளது.
மட்டக்களப்பு நகரின் பயிளியர் வீதியில் கோட்டமுனை கிராம அபிவிருத்தி சங்கத்தின் பங்களிப்புடன் இன்று(25) குடும்ப அட்டைக்கு ஒரு எரிவாயு சிலிண்டர் என்ற அடிப்படையில் இந்த விநியோகமானது மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த 2 மாதங்களின் பின்னர் கடந்த 14 ம் திகதி மட்டக்களப்பு மாவட்டத்தில் பொது மக்களுக்கு எரிவாயு விநியோகிக்கும் நடவடிக்கை அரசாங்க அதிபரினால் அறிமுகப்படுத்தப்பட்டு ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
இந்த எரிவாயு பிரதேச ரீதியாக விநியோக்கப்பட்டுவரும் நிலையில் இன்று பயினியர் வீதியில் ஆயிரம் எரிவாயு சிலிண்டர்கள் விநியோகிக்கவுள்ளதாக எரிவாயு கம்பனி அறிவித்துள்ளது.
சமூக பொறுப்பு
கோட்டமுனை கிராம அபிவிருத்தி சங்கம் பொதுமக்களை இரவில் வரிசையில் காத்திருக்க விடாமல் எரிவாயு சிலிண்டர்களை பொறுப்பெடுத்து அதனை வரிசைப்படுத்தி, பாதுகாத்து சீராக வழங்கும் நடவடிக்கையை மேற்கொண்டுள்ளது.
செய்தி: பவன்