வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோரிற்கு பி.சி.ஆர் பரிசோதனை
வவுனியாவில் பயணத்தடை நேரத்தில் வீதியில் பயணித்தோர் உள்ளடங்கலாக 130 பேருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை சுகாதாரப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
குறித்த பரிசோதனைகள் இன்று (03.06) முன்னெடுக்கப்பட்டுள்ளன.
வவுனியா மாவட்டத்தில் தினந்தோறும் 130 பி.சி.ஆர் முடிவுகள் 24 மணிநேரத்தில் வழங்கச் சுகாதாரப் பிரிவினரால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில் 130 பேருக்கு எழுமாறாக பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டது.
அந்தவகையில் வவுனியா, குருமன்காடு பகுதியில் பயணத்தடை நேரத்தில் வீதியால் பயணித்தோர், அரச மற்றும் தனியார் வங்கி ஊழியர்கள், வங்கி காவலாளர்கள், நிறுவனங்களில் பணியாற்றுவோர், சில கிராமங்களைச் சேர்ந்தோர், வவுனியா நகரம் என எழுமாறாக 130 பேரிடம் பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதன் முடிவுகளையடுத்து அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனச் சுகாதாரப்
பிரிவினர் தெரிவித்துள்ளனர்.





சூரிய பெயர்ச்சியால் உருவாகும் அரிய இரட்டை ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாக்பாட் உறுதி! Manithan