வெகுவாக குறைக்கப்பட்டுள்ள பி.சி.ஆர் பரிசோதனைகள்
கோவிட் 19 தொற்றாளர்களை அடையாளம் காண்பதற்காக தினமும் நடத்தப்பட்ட 25 ஆயிரம் பி.சி.ஆர் பரிசோதனைகள் தற்போது 15 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளதாக பொது சுகாதார பரிசோதகர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
சமூகத்திற்குள் நடமாடும் தொற்றாளர்களை கண்டறிய தற்செயலாக ஆங்காங்கே நடத்தப்பட்டு வந்த பி.சி.ஆர் பரிசோதனைகளும் நிறுத்தப்பட்டுள்ளதாக அந்த சங்கத்தின் தலைவர் உபுல் ரோஹன கூறியுள்ளார்.
எவ்வாறாயினும் பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக அமுல்படுத்தப்பட்டுள்ளதன் காரணமாக தொற்றாளர்களை அடையாளம் காண்பதும் அவர்களுடன் சம்பந்தப்பட்டவர்களை அடையாளம் காண்பதும் இலகுவாகியுள்ளது.
பயணக்கட்டுப்பாடுகள் கடுமையாக்கப்பட்டதன் பிரதிபலன்கள் எதிர்வரும் நாட்களில் நாட்டுக்கு கிடைக்கும் எனவும் உபுல் ரோஹன குறிப்பிட்டுள்ளார்.
சிங்கள தனியார் தொலைக்காட்சி ஒன்றுக்கு வழங்கிய நேர்காணலில் அவர் இதனை கூறியுள்ளார்.