முகக்கவசம் அணியாத 48 பேருக்கு காத்தான்குடியில் பி.சி.ஆர் பரிசோதனை
மட்டக்களப்பு - காத்தான்குடியில் மாலை முகக்கவசம் அணியாமல் நடமாடிய 48 பேருக்கு நேற்றைய தினம் பி.சி.ஆர் பரிசோதனைகள் செய்யப்பட்டதாக காத்தான்குடி சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
காத்தான்குடி பொலிஸாரின் உதவியுடன் காத்தான்குடி பிரதான வீதியின் குட்வின் சந்தியில் இந்த பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளன.
முகக்கவசம் அணியாமல் வீதியினால் சென்றவர்களுக்கே இதன் போது பி.சி.ஆர். பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீலின் வழிகாட்டலிலும் அவரின் தலைமையிலும் காத்தான்குடி மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஏ.எல்.எம்.பசீர் பொதுச் சுகாதார பரிசோதகர்களான ஏ.எல்.எம்.றஹ்மத்துல்லாஹ், கருணாகரன், செனவிரட்ன ஆகியோரினால் பி.சி.ஆர் பரிசோதனைகளுக்கான மாதிரிகள் பெறும் நடவடிக்கை இடம்பெற்றுள்ளன.
இதன்போது 48 பேரிடமிருந்து மாதிரிகள் பெறப்பட்டதாகவும், அவை பி.சி.ஆர்
பரிசோதனைகளுக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் காத்தான்குடி சுகாதார வைத்திய
அதிகாரி வைத்தியர் ஏ.எல்.எம்.நபீல் தெரிவித்துள்ளார்.



புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan
ஹீரோவாக என்ட்ரி கொடுக்கும் இயக்குனர் ஷங்கர் மகன் அர்ஜித்... நாயகி, பட பெயருடன் வெளியான போட்டோ Cineulagam
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri