தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையத்துடன் தொடர்பை பேணிய வவுனியா வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மூடப்பட்டத்தையடுத்து அங்கு சென்று வந்த வவுனியாவை சேர்ந்த 112 மரக்கறி மொத்த வியாபாரிகளுக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த பரிசோதனை இன்று காலை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கோவிட் தொற்று அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ள நிலையில் தம்புள்ளை பொருளாதார மத்திய நிலையம் மறு அறிவித்தல் வரை மூடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் வவுனியாவிலிருந்து தம்புள்ளைக்கு மரக்கறிகள், பழங்கள் என்பவற்றைக் கொண்டு செல்பவர்கள் மற்றும் தம்புள்ளையில் இருந்து வவுனியாவிற்கு வருகை தந்து வியாபார நடவடிக்கைகளில் ஈடுபடுபவர்கள் ஆகியோருக்கு வவுனியாவில் உள்ள மரக்கறி மொத்த நிலையத்தில் சுகாதாரத் துறையினரால் பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்படி 112 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.






