வாழைச்சேனையில் 51 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் 51 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் இன்று மேற்கொள்ளப்பட்டுள்ளன.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்துக் காணப்படும் நிலையிலும், மட்டக்களப்பு மாவட்டத்தில் கோவிட் வைரஸ் தாக்கம் அதிகரித்த நிலையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் தொடர்ச்சியாக பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்று வருகின்றது.
அந்தவகையில் வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவிலுள்ள வியாபார நிலையத்தினர், சுகாதார திணைக்களத்தின் சட்டத்தினை மீறி அலுவலகத்தில் அதிகமான ஊழியர்களைக் கொண்டு இயங்கிய தனியார் முதலீட்டு நிறுவனத்தில் கடமையாற்றி ஊழியர்கள் என 51 நபர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் இடம்பெற்றுள்ளன.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச் சுகாதார பரிசோதகர் ஆர்.நிதிராஜ், பொதுச் சுகாதார பரிசோதகர்கள், சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக உத்தியோகஸ்தர்கள் எனப் பலர் கலந்து கொண்டுள்ளனர்.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும்,
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்துக் காணப்படும்
நிலையில் பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறும்
சுகாதார வைத்திய அதிகாரி டி.எஸ்.சஞ்ஜீவ் மேலும் தெரிவித்துள்ளார்.







போர் நிறுத்தம் அறிவித்ததால் வெளியுறவு செயலாளர் குடும்பத்தை ட்ரோல் செய்யும் நெட்டிசன்கள் News Lankasri

இந்த தேதியில் பிறந்த பெண்கள் அதிர்ஷ்டசாலிகளாம்.. கணவருக்கு தான் லக்- எண்கணிதம் சொல்வது என்ன? Manithan
