நுவரெலியா லிந்துலை பகுதியில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை!
நுவரெலியா லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் 225 பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை இன்று மேற்கொள்ளப்பட்டதாக, லிந்துலை பொதுச்சுகாதார பரிசோதகர்கள் தெரிவித்துள்ளனர்.
லிந்துலை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் அண்மைக்காலமாக கொரோனா தொற்றாளர்கள் அதிகரித்து வருவதோடு, இதுவரை 50 பேர் இனங்காணப்பட்டு கொரோனா வைரஸ் தொற்று சிகிச்சை நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர்.
கடந்த வாரம் அக்கரப்பத்தனை பிரதேச சபை தவிசாளருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டதையடுத்து, குறித்த பிரதேச சபை முடக்கம் செய்ததுடன், அதில் தொழில் புரிந்த 43ற்கும் மேற்பட்ட நபர்கள் 14 நாட்கள் தனிமைப்படுத்தப்பட்டனர்.
இவர்களுக்கான பி.சி.ஆர் பரிசோதனையும், இப்பிரதேசத்தில் ஏற்கனவே தனிமைப்படுத்தப்பட்டிருந்த சுமார் 180 பேருக்கும் மொத்தமாக 225 பேருக்கு இன்று(27.12.2020) லிந்துலை பிரதேச பொதுச் சுகாதார பரிசோதகர் எஸ். புஸ்பகாந்தன் தலைமையில் பரிசோதனை லிந்துலை சுகாதார காரியாலயத்தில் முன்னெடுக்கப்பட்டுள்ளது.





குடும்பத்துடன் பிறந்தநாளை கொண்டாடியுள்ள CM விஜய்யின் அப்பா எஸ்.ஏ.சந்திரசேகர்... போட்டோஸ் இதோ Cineulagam
திரிஷா பற்றிய முக்கிய ரகசியத்தை போட்டுடைத்த விஷ்ணு விஷால்! கோபப்பட மாட்டார் என நம்புறேன்.. Cineulagam
சட்டவிரோதமாக வெளியான விஜய்யின் ஜனநாயகன் படத்தை இத்தனை கோடி பேர் பார்த்துள்ளார்களா?... ஷாக்கிங் தகவல் Cineulagam
கணவர் Gay! திருமணத்திற்குப் பிறகு வெளிவந்த ரகசியம்: தம்பதியின் வித்தியாசமான முடிவுக்கு குவியும் பாராட்டு Manithan