மண்முனை மேற்கு பிரதேச செயலக உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை
மட்டக்களப்பு மாவட்டத்தின் மண்முனை மேற்கு பிரதேச செயலகத்தில் கடமையாற்றும் உத்தியோகத்தர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
இன்று திங்கட்கிழமை பிற்பகல் இவர்களுக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டுள்ளது.
மண்முனை மேற்கு, வவுணதீவு பிரதேச சுகாதார வைத்திய அதிகாரி அலுவலகத்தினால் இந்த பி.சி.ஆர் பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இதன்போது பொது மக்களுடன் நேரடி தொடர்புடைய அலுவலக மற்றும் வெளிக்கள உத்தியோகத்தர்களுக்கு இப்பரிசோதனை மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பொதுமக்களும் மற்றும் அலுவலக உத்தியோகத்தர்கள் அனைவரும் சுகாதார விதிமுறைகளைப்
பின்பற்றி முறையாக முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியைப் பின்பற்றி நடப்பது
தமக்கும் சமூகத்திற்கும் பாதுகாப்பைத் தரும் என இதன்போது சுகாதார திணைக்கள
அதிகாரிகள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.



வெளியே போக சொன்ன சேது, அதிர்ச்சி முடிவு எடுத்த தமிழ்ச்செல்வி... சின்ன மருமகள் சீரியல் பரபரப்பு புரொமோ Cineulagam
ஈரான் தாக்குதலில் நொறுங்கிப் போன அமெரிக்க போர் விமானங்கள்: வெளியானப் புகைப்படங்களால் அதிர்ச்சி News Lankasri