வாழைச்சேனை சுகாதார பிரிவில் அறுபது பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனை முன்னெடுப்பு
வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் அறுபது (60) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பரிசோதனைகள் இன்று ஞாயிற்றுக்கிழமை முன்னெடுக்கப்பட்டுள்ளன.இது தொடர்பில் மேலும் தெரிவிக்கையில்,
வாழைச்சேனை பிரதேச செயலாளர் பிரிவில் கோவிட் தொற்றினால் முடக்கப்பட்ட நிலையில் காணப்படும் மருதநகர் கிராமத்தில் தனிமைப்படுத்தலிலிருந்தவர்கள் மற்றும் மேலெழுவாரியாக முப்பது (30) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் கோவிட் தொற்றாளர்களுடன் நெருங்கியவர்கள் (30) பேருக்கு பி.சி.ஆர். பரிசோதனைகளுமாக அறுபது (60) பேருக்கு பி.சி.ஆர் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
நாட்டில் கோவிட் வைரஸ் தாக்கத்தின் மூன்றாவது அலை பரவியுள்ள நிலையிலும், வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவிலும் அதிகரித்துக் காணப்படும் நிலையில், பொதுமக்கள் விழிப்புடன் இருந்து பிரதேசத்தினை பாதுகாத்துக் கொள்ளுமாறு வாழைச்சேனை சுகாதார வைத்திய அதிகாரி தேவராஜமுதலி ஸ்டீப் சஞ்ஜீவ் தெரிவித்துள்ளார்.
குறித்த பி.சி.ஆர் பரிசோதனையில் மேற்பார்வை பொதுச்சுகாதார பரிசோதகர்
ஆர்.நிதிராஜ், சுகாதார பரிசோதகர்கள் மற்றும் சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக
உத்தியோகத்தர்கள் ஆகியோர் கலந்து கொண்டுள்ளனர்.




