இமாலய இலக்கை துரத்தி பிடித்த பஞ்சாப் கிங்ஸ்! புள்ளிப்பட்டியலில் முதலிடம்
ஐ.பி.எல்.தொடரின் 35-வது லீக் போட்டி டெல்லியில் இன்று(25) நடந்தது. இதில் டெல்லி கேப்பிடல்ஸ், பஞ்சாப் கிங்ஸ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
நாணய சுழற்சியில் வென்ற டெல்லி அணி துடுப்பாட்டத்தை தேர்வு செய்தது. அதன்படி, டெல்லி அணி முதலில் களமிறங்கியது.
பாகிஸ்தானியப் போர் விமானங்களின் கர்ஜனைக்கு மத்தியில் தரையிறங்கிய அப்பாஸ் அராக்சி! நள்ளிரவில் நடந்த அவசர பேச்சுவார்த்தை
டெல்லி அணி
பதும் நிசங்கா, கே.எல்.ராகுல் ஜோடி 28 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் பதும் நிசங்கா 11 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார். அடுத்து கே.எல்.ராகுலுடன் நிதிஷ் ராணா இணைந்தார்.

இந்த ஜோடி அதிரடியாக விளையாடியது. பொறுப்புடன் விளையாடிய கே எல் ராகுல் 47 பந்தில் சதமடித்தார். 2வது விக்கெட்டுக்கு 220 ஓட்டங்கள் சேர்த்த நிலையில் நிதிஷ் ரானா 91 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
இறுதியில், டெல்லி அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் 2 விக்கெட்டுக்கு 264 ஓட்டங்களைக் குவித்தது. கே.எல்.ராகுல் 152 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார்.
பஞ்சாப் அணி
இதையடுத்து, 265 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற கடின இலக்குடன் பஞ்சாப் அணி களமிறங்கியது. தொடக்க வீரரான பிரப்சிம்ரன் சிங் அதிரடியாக விளையாடினாார். சிக்சர், பவுண்டரிகளாக விளாசினார்.
இதனால் அவர் 26 பந்தில் 5 சிக்சர், 9 பவுண்டரி உள்பட 76 ஓட்டங்கள் குவித்தார்.

அடுத்து இறங்கிய ஷ்ரேயாஸ் ஐயர் நிலைத்து ஆடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார்.
இறுதியில், பஞ்சாப் அணி 18.5 ஓவரில் 4 விக்கெட்டுக்கு 265 ஓட்டங்கள் எடுத்து அபார வெற்றி பெற்றது.
ஷ்ரேயாஸ் ஐயர் 71 ஓட்டங்களுடன் ஆட்டமிழக்காமல் உள்ளார். இதன்மூலம் பஞ்சாப் அணி 7 போட்டிகளில் விளையாடி 6 வெற்றியுடன் 13 புள்ளிகள் எடுத்து முதலிடத்தில் நீடிக்கிறது.