போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான கலந்துரையாடல்
வடக்கு மாகாணத்தில் GovPay விண்ணப்பத்தின் மூலம் போக்குவரத்து அபராதம் செலுத்தும் திட்டத்தை செயல்படுத்துவது தொடர்பான பொது விழிப்புணர்வு திட்டங்கள் 2025.10.26, 2025.10.27 மற்றும் 2025.10.28 ஆகிய தேதிகளில் வவுனியா, கிளிநொச்சி மற்றும் யாழ்ப்பாணம் காவல் பிரிவுகளை உள்ளடக்கி செயல்படுத்த திட்டமிடப்பட்டுள்ளது.
அந்தவகையில் நேற்றையதினம்(26) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் உள்ள கேட்போர் கூடத்தில் இந்த தெளிவுபடுத்தல் நிகழ்வு இடம்பெற்றது.
கலந்துரையாடல்
வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் திலக் தனபாலவின் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் யாழ்ப்பாணம் மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் மாறப்பண, யாழ்ப்பாணம் மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் ஜயமால், உதவிப் பொலிஸ் அத்தியட்சகர்கள், ஏனைய பொலிஸ் அதிகாரிகள் என பலரும் கலந்துகொண்டனர்.





