கெஹல்பத்ர பத்மேவுடனான தொடர்பு! மற்றுமொரு பிரபல நடிகையிடம் விசாரணை
தற்போது பொலிஸ் காவலில் உள்ள ஒரு குற்றவாளியான கெஹல்பத்தர பத்மேவுடனான தொடர்பு தொடர்பில் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகாவிடம் குற்றப் புலனாய்வுத் துறையினர் விசாரணை நடத்தியுள்ளனர்.
கெஹெல் பத்ர பத்மே மீதான விசாரணை தொடர்பாக வாக்குமூலம் பதிவு செய்ய அவருக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருந்ததை தொடர்ந்து இந்த விசாரணை நடைபெற்றுள்ளது.
ஸ்ரீமாலி பொன்சேகா
கெஹெல் பத்ர பத்மேயுடன் அவர் நடிகை ஸ்ரீமாலி பொன்சேகா இருக்கும் புகைப்படம் வெளியானதை தொடர்ந்து விசாரணைக்கு அழைக்கப்பட்டிருந்தார்.

மேலும், கெஹெல் பத்ர பத்மேவுடன் தன்னை தொடர்புபடுத்தி கூறப்படும் கூற்றுக்களை நிராகரிப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
கெஹெல் பத்ர பத்மேவை தனக்குத் தெரியாது. ஒரு முறை துபாயில் என் குடும்பத்துடன் ஒரு புத்தாண்டு நிகழ்வில் கலந்து கொண்டேன், பலர் எங்களுடன் புகைப்படம் எடுத்தார்கள் - அவர் அவர்களில் இருந்தார்.
தொடரும் விசாரணை
இரசிகர்கள் படங்களைக் கேட்டால், நாங்கள் மறுக்கவில்லை, என்று அவர் விளக்கியுள்ளார்.

சமூகவலைத்தளங்களில் என்ன சொல்லப்படுகிறது என்பது எனக்குத் தெரியும், ஆனால் வதந்திகள் என் பெயரையோ அல்லது நம்பிக்கையையோ கெடுக்க நான் அனுமதிக்க மாட்டேன் என்றும் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த வாரம் இதேபோன்ற மொடல் பியூமி ஹன்சமாலி மீதும் விசாரணை நடத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவுக்கு எதிராக புலம்பெயர் டாக்சி ஓட்டுநரின் மகன்: அவுஸ்திரேலிய அணியில் இந்திய வம்சாவளி பவுலர் News Lankasri
தீவு நாடொன்றை மொத்தமாக தாக்கவிருக்கும் புயல்: ஹொட்டல் ஒன்றில் சிக்கிய 200 பிரித்தானியர்கள் News Lankasri
2011ஆம் ஆண்டு தீபாவளிக்கு வெளிவந்த வேலாயுதம், 7ஆம் அறிவு.. பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு தெரியுமா Cineulagam