தாயை கோடரியால் தாக்கி கொலை செய்த மகன்
மதவாச்சி, இசின்பஸ்ஸகம பிரதேசத்தில் உள்ள ஒரு வீட்டில் பெண் ஒருவர் கூர்மையான ஆயுதத்தால் குத்திக் கொல்லப்பட்டுள்ளார்.
நேற்று மதவாச்சி பொலிஸாரால் கொலை செய்யப்பட்ட பெண்ணின் சடலம் கண்டெடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.
81 வயதுடைய பெண் ஒருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கோடரியால் தாக்கி கொலை
அந்தப் பெண் தனது மகனுடன் வீட்டில் வசித்து வந்ததாகவும், அவருக்கு பேச்சுத் திறன் குறைபாடு இருந்ததாகவும் தெரியவந்துள்ளது.

இதுவரை நடத்தப்பட்ட விசாரணைகளில் நேற்று முன்தினம் இரவு மகன் அவரது தலையில் கோடரியால் தாக்கியதாகவும் தெரியவந்துள்ளது.
கொலைக்கான காரணம் இன்னும் தெரியவில்லை, மேலும் சந்தேக நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.
சம்பவம் குறித்து மதவாச்சி பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.