சாணக்கியனுக்கு அறிவுரைக் கூறிய பவித்ரா! சிக்கினார் சரத் வீரசேகர
முகக்கவசம் அணியாது நாடாளுமன்றத்தில் உரையாற்றிய தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் இராசமாணிக்கத்திற்கு சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி அறிவுரை வழங்கியுள்ளார்.
இன்று நாடாளுமன்றத்தில் விவாதத்தில் கலந்துக்கொண்ட சாணாக்கியன் தனது முகக்கவசத்தை கழற்றி விட்டு உரையாற்ற ஆரம்பித்துள்ளார்.
அப்போது குறுக்கிட்ட சுகாதார அமைச்சர், “ முதலில் முகக்கவசத்தை போட்டுக்கொள்ளுங்கள்” எனக் கூறினார்.
இதற்கு பதிலளித்துள்ள சாணாக்கியன், எனக்கு மாத்திரம் பொறுப்பில்லை என்று நாட்டு மக்கள் நினைக்கக்கூடும். சுகாதார அமைச்சின் பின்னால் அமர்ந்திருந்த அமைச்சர் சரத் வீரசேகரவும் முகக்கவசத்தை அணிந்திருக்கவில்லை. எனது கேள்வி முடியவில்லை” எனக் கூறியுள்ளார்.
மாபெரும் வெற்றியடைந்த கட்டா குஸ்தி 2... விஷ்ணு விஷாலுக்கு தயாரிப்பாளர் கொடுத்த பிரம்மாண்ட பரிசு Cineulagam
மிகப்பெரிய நபரை குளிப்பாட்டி, கேக் வெட்டி பிறந்தநாளை கொண்டாடிய சீரியல் நடிகை ஷோபனா... வீடியோ இதோ Cineulagam