மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளி கைது
குளியாப்பிட்டிய மருத்துவமனையில் தங்கி சிகிச்சை பெற்றுக் கொண்டிருந்த நிலையில் மருத்துவமனை ஊழியர்களைத் தாக்கிய நோயாளியொருவரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.
குறித்த நோயாளி குளியாப்பிட்டிய மருத்துவமனையின் முதலாம் விடுதியில் கடந்த மூன்று நாட்களுக்கு முன்னர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அதன் பின்னர் அவர் அதற்கடுத்த இரண்டு நாட்களும் மருத்துவமனை ஊழியர்கள் இருவரைத் தாக்கியுள்ளார்.
நோயாளி கைது
தாக்குதலுக்கு உள்ளான ஊழியர்கள் இரண்டு பேரும் தற்போதைக்கு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.
இதனையடுத்து குறித்த நோயாளியை விடுதியிலிருந்து இருந்து வெளியேற்றிய மருத்துவர்கள், அவரது அடாவடித்தனங்கள் குறித்து பொலிஸாருக்கு அறிவித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸார் குறித்த நோயாளியை கைது செய்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |