உள்ளூராட்சி தேர்தல்: வாக்களித்த ஆனந்தசங்கரி
2025ஆம் ஆண்டுக்கான உள்ளூராட்சி அதிகார சபைத் தேர்தலுக்காக தமிழர் விடுதலை கூட்டணியின் செயலாளர் நாயம் ஆனந்தசங்கரி தன்னுடைய வாக்கினை பதிவு செய்துள்ளார்.
கிளிநொச்சி மகாவித்தியாலயத்தில் அவர் தனது வாக்கினை பதிவு செய்தார்.
செய்தி - தேவந்தன்
புதிய இணைப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் 23.4 வீதமான வாக்குப்பதிவு காலை 10.00மணி வரை இடம்பெற்றுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் மாவட்ட அரசாங்கதிபருமான எஸ்.முரளீதரன் தெரிவித்துள்ளார்.
வாக்களித்த சிறீதரன்
நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன், அவரது சொந்த இடமான வட்டக்கச்சி மாயவனூர் பகுதியில் தனது வாக்கினை பதிவு செய்துள்ளார்.
இதேவேளை, கிளிநொச்சி மாவட்டத்தில் தற்பொழுது வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
செய்தி - தேவந்தன்
கிளிநொச்சியில் வாக்களிப்பு
உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்களிப்பு இன்று (6) காலை 7 மணிக்கு ஆரம்பமாகி தற்போது இடம்பெற்று வருகின்றது.
இந்தநிலையிலே, கிளிநொச்சி மாவட்டத்தில் வாக்களிப்பு நிலையங்களில் தமது வாக்கினை மக்கள் மிகவும் ஆர்வத்துடன் பதிவு செய்து வருகின்றனர்.
வாக்களிப்பு
கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள மூன்று பிரதேச சபைகளுக்கான கரைச்சி, பூநகரி, பச்சிளைப்பள்ளி ஆகிய பிரதேச சபைகளுக்காக 40 வட்டாரங்களில் 108 வாக்களிப்பு நிலையங்களில் வாக்களிப்பு நடவடிக்கைகள் அமைதியான முறையில் ஆரம்பமாகியுள்ளன.
இதேவேளை, உள்ளூராட்சி மன்றத் தேர்தல் இன்று (06) காலை 7 மணிக்குத் ஆரம்பமாகி மாலை 4 மணி வரை நாடளாவிய ரீதியாக 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்குப்பதிவு இடம்பெற உள்ளமை குறிப்பிடத்தக்கது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |

