உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவு நிறைவு
நாடளாவிய ரீதியில் அமைதியான முறையில் உள்ளூராட்சி மன்றத் தேர்தலுக்கான வாக்குப் பதிவுகள் இடம்பெற்று நிறைவடைந்துள்ளது.
காலை 7 மணிக்கு ஆரம்பமான தேர்தல் வாக்குப் பதிவுகள் மாலை 4 மணியுடன் நிறைவடைந்துள்ளது.
339 உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் இன்று நடைபெற்றது. நாடளாவிய ரீதியிலுள்ள 13,759 வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு பதிவுகள் இடம்பெற்றன.
வாக்குப் பதிவுகள்
வாக்களிப்பு நிறைவடைந்தவுடன், அந்ததந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்கு எண்ணும் பணிகள் முன்னெடுக்கப்படும் என தேர்தல்கள் ஆணைக்குழு ஏற்கனவே அறிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
அதற்கமைய மாவட்ட ரீதியாக அளிக்கப்பட்ட வாக்குகளின் வீதங்கள் வருமாறு
திஹாமடுல்ல 63%
யாழ்ப்பாணம் 56.06%
வவுனியா 60%
மன்னார் 70%
மொனராகலை 61%
நுவரெலியா 60%
கேகாலை 58%
அனுராதபுரம் 64%
களுத்துறை 61%
கம்பஹா 36%
பதுளை 60%
இரத்தினபுரி 60%
காலி 63%
மாத்தறை 58%
கிளிநொச்சி 60%
புத்தளம் 55%
மாத்தளை 62%
கண்டி 55%
ஹம்பாந்தோட்டை 20%
கொழும்பு 52%
பொலநறுவை 64%
குருணாகல் 20%
திருகோணமலை 68%,
அம்பாறை 63%
மட்டக்களப்பு 61%,
முல்லைத்தீவு 60%