கனடாவில் நூற்றுக்கும் அதிகமான குழந்தைகளை தாக்கிய நோய்க்கிருமி
கனடாவின் ஆல்பர்ட்டா மாகாணத்திலுள்ள கால்கரி நகரில் அமைந்துள்ள பல குழந்தைகளுக்கான பகல் நேரக் காப்பகங்களில் ஈ கோலை என்னும் பயங்கர கிருமி தாக்கம் ஏற்பட்டுள்ளதாக ஆல்பர்ட்டா சுகாதார அமைப்பு தெரிவித்துள்ளது.
இதனால் சுமார் 142 குழந்தைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவர்களில் 26 குழந்தைகள் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர்களில் சிலர் குழந்தைகளுக்கு டயாலிசிஸ் செய்யும் நிலை ஏற்பட்டுள்ளது. சிறுநீரகம் பாதிக்கப்படும் போதுதான் இந்த டயாலிசிஸ் சிகிச்சை மேற்கொள்ளப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

குறிப்பாக இந்த காப்பகங்களில் உள்ள குழந்தைகள் அனைவருக்கும், ஒரே சமையலறையிலிருந்துதான் உணவு விநியோகம் செய்யப்படுவதாக தெரிவிக்கப்படுகிறது.
உணவு விநியோகம்
தற்போது வரை குழந்தைகளுக்கு இந்த நோய்த்தொற்றுக்கான காரணம் சுகாதார அதிகாரிகளால் வெளிப்படுத்தாவிட்டாலும், அந்தக் குழந்தைகள் அனைவரும் ஒரே சமையலறையில் இருந்து விநியோகிக்கப்படும் உணவை உண்டதால் அவர்களுக்கு தொற்று ஏற்பட வாய்ப்புள்ளது என சந்தேகிக்கப்படுகின்றது.
இந்த ஈ கோலை என்னும் கிருமியிலேயே பல பிரிவுகள் உள்ளன.
நச்சுப்பொருளை உருவாக்கும் ஈ கோலை, குடலில் இரத்தம் வரவைக்கும் ஈ கோலை, குடலில் நோயுண்டாக்கும் ஈ கோலை, குடலின் தோலுக்குள்ளேயே நுழையக்கூடிய ஈ கோலை என்னும் பல வகை உள்ளன.
பல ஈ கோலை கிருமிகள், மலம் கழித்துவிட்டு சரியாக கை கழுவாததால் பரவ வாய்ப்புள்ளது. இப்படிப்பட்ட ஈ கோலையில், முதல் வகையான நச்சுப்பொருள் உருவாக்கும் ஈ கோலையால் பாதிக்கப்பட்ட குழந்தைகளே தற்போது டயாலிசிஸ் செய்யும் நிலைக்குச் சென்றுள்ளார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
குரு- புதன் உருவாக்கும் அரிய ராஜயோகம்... ஏப்ரல் 3 முதல் இந்த ராசிகளுக்கு ராஜவாழ்க்கை உறுதி! Manithan
அடுத்தடுத்த கேள்விகள் கேட்ட கோமதி, அதிரடி முடிவு எடுத்த பாண்டியன்... பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியல் Cineulagam
பிரச்சனைகளுக்கு இடையில் ஒன்றாக இணைந்துள்ள மீனா, ஸ்ருதி, ரோஹினி... என்ன விஷயம், சிறகடிக்க ஆசை சீரியல் வீடியோ Cineulagam
பணத்தை திருடி நிலாவிடம் கொடுத்த சோழன், வீட்டிற்கு தேடிவந்த பிரச்சனை... அய்யனார் துணை சீரியல் Cineulagam
வளைகுடா நாடுகளில் இருந்து அதிகம் பணம் பெறும் இந்திய மாநிலங்கள் - தமிழ்நாடு எந்த இடத்தில்? News Lankasri