சர்ச்சையில் சிக்கிய போதகர் ஜெரோம் பெர்னாண்டோ! சொத்துக்கள் தொடர்பில் வெளியான தகவல்
போதகர் ஜெரோம் பெர்னாண்டோவுக்குச் சொந்தமான சொத்துக்கள் எவ்வாறு கையகப்படுத்தப்பட்டன என்பது தொடர்பிலான விசாரணைகளை ஆரம்பிக்க சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தீர்மானித்துள்ளது.
ஜெரோம் பெர்னாண்டோ ஆராதனையில் ஈடுபடும் கட்டுநாயக்க – வெயங்கொட வீதியிலுள்ள மிரக்கிள் டோம் எனும் கிறிஸ்தவ ஆலயத்தின் பெறுமதி சுமார் 9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த ஆலயம் அமையப்பெற்றுள்ள 4 ஏக்கர் இடத்தை, போதகர் ஜெரோம் பெர்னாண்டோவின் சபையின் உறுப்பினர்களான ஒரு தம்பதிகள் வாங்கிக்கொடுத்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.
உதவித்தொகை
கல்கிஸ்ஸ மற்றும் ஹெவ்லொக் சிட்டியில் விலையுயர்ந்த இரண்டு வீடுகள் போதகர் குடும்பத்தினரின் பெயரில் வாங்கப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
லண்டன், ஐரோப்பா, அமெரிக்கா, ஹொங்கொங், துபாய், அவுஸ்திரேலியா, இந்தியா மற்றும் பங்களாதேஷ் ஆகிய நாடுகளில் இருந்து இந்நாட்டிற்கு வரும் மக்களிடம் இருந்தும் உதவிப் பணம் பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது.
மேலும் இந்த நிறுவனத்திற்கு உதவித்தொகையாக செலுத்தக்கூடிய குறைந்தபட்ச தொகை ஐந்து இலட்சம் ரூபாய் என்பது இங்கு தெரியவந்துள்ளது.
மேலும், தேவாலயம் கட்டப்பயன்படுத்தப்பட்ட கல் ஒன்று ஐந்து இலட்சத்துக்கு விற்கப்பட்டமையும் தெரியவந்துன்னது.
இந்த நிறுவனத்தால் பெறப்படும் பணம் துபாய், கத்தார் மற்றும் இங்கிலாந்து ஆகிய நாடுகளில் உள்ள கணக்குகளில் உண்டியல் முறையில் வைப்பு செய்யப்பட்டுள்ளதாக மேலதிக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |

பதினாறாவது மே பதினெட்டு 1 நாள் முன்

15 வருட நட்பு, காதல் வந்தது இப்படித்தான்.. மேடையில் விஷால் - தன்ஷிகா ஜோடியாக திருமண அறிவிப்பு Cineulagam

வெளிநாட்டு மாணவர்களுக்கு உணவு கிடையாது: உணவு வங்கிகளின் முடிவால் தவிக்கும் சர்வதேச மாணவர்கள் News Lankasri
