சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல்

Dollar to Sri Lankan Rupee CID - Sri Lanka Police Sri Lanka Police Money
By Vethu Jul 12, 2023 09:42 AM GMT
Report

இலங்கை உட்பட 8 நாடுகளைச் சேர்ந்த சுமார் 300 வர்த்தகர்களுக்கு வாரத்திற்கு ஒருமுறை வர்த்தக ஆலோசனை சேவை மற்றும் ஆசீர்வாத நிகழ்ச்சியை போதகர் ஜெரோம் பெர்னாண்டோ நடத்தி வருவதாக தெரிவிக்கப்படுகின்றது.

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு நடத்திய விசாரணையில் தெரியவந்துள்ளது.

இந்த விரிவுரையானது இணையவழியில் நடத்தப்படுவதுடன் வர்த்தகர்கள் இலங்கையில் அமைந்துள்ள வங்கிக் கணக்கில் 210 அமெரிக்க டொலர்களை வைப்பிட்டு இந்த விரிவுரையில் இணைவதாக விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்த விரிவுரையின் மூலம் மட்டும் ஜெரோம் பெர்னாண்டோ 1.5 மில்லியன் ரூபாவுக்கு மேல் வருமானம் ஈட்டுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

புலனாய்வுத் திணைக்கள விசாரணை

சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் | Paster Jeram Fernando Cid Inquiry

பௌத்த மதத்தை அவமதிக்கும் வகையில் கருத்து வெளியிட்ட குற்றச்சாட்டில் குற்றப் புலனாய்வுத் திணைக்களம் விசாரணைகளை ஆரம்பித்தது.

இதன் பின்னர், அவர் நாட்டை விட்டு வெளியேறி இந்த விரிவுரைகளை மேற்கொண்டு வருவதுடன், இலங்கையிலுள்ள வங்கிக் கணக்கில் பணம் வழைமையை போன்று வைப்பிடப்படுவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவினர் கண்டறிந்துள்ளனர்.

ஜெரோம் பெர்னாண்டோ சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டுள்ளதாக இதுவரை தெரியவந்துள்ள போதிலும், மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவு தெரிவித்துள்ளது.

கட்டுநாயக்காவிலுள்ள மண்டபம் ஒன்றில் இந்த விரிவுரை நடைபெற்றது. இந்நிலையில் குறித்த மண்டபம் அடங்கிய காணியை சர்ச்சைக்குரிய ஜெரோமிற்கு வழங்கியதாக, அதன் உரிமையாளர் சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவின் அதிகாரிகளிடம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

முன்னாள் பொலிஸ் அதிகாரியான அவர், தேவாலயத்தை நிர்மாணிப்பதற்காக காணியை நன்கொடையாக வழங்கியதாக சட்டவிரோத சொத்துக்கள் விசாரணைப் பிரிவில் தெரிவித்துள்ளார்.

ஹோட்டல் அமைப்பதற்காக 9 கோடி ரூபாவுக்கு வாங்கிய இந்த காணி 2015ஆம் ஆண்டு ஜெரோம் பெர்னாண்டோவுக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறியுள்ளார்.

காணியின் உரிமையாளரான பொலிஸ் அதிகாரி ஆடை வியாபாரத்தில் ஈடுபட்டுள்ள கோடீஸ்வரராகும்.

19,000 மில்லியன் அமெரிக்க டொலர்

சர்ச்சைக்குரிய போதகரிடம் மேற்கொண்ட விசாரணையில் பல அதிர்ச்சித் தகவல் | Paster Jeram Fernando Cid Inquiry

கட்டுநாயக்க சுதந்திர வர்த்தக வலயத்திற்கு அருகில் அமைந்துள்ள தனது தொழிற்சாலையை வெளிநாட்டவர் ஒருவருக்கு 19,000 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கு விற்பனை செய்துள்ளதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளது. அந்த பணத்தில் நிலம் வாங்கப்பட்டதாக கூறப்படுகிறது.

இந்த தொழிற்சாலை வெளிநாட்டவருக்கு விற்பனை செய்யப்பட்டாலும் கூட, தொழிற்சாலை அமைந்துள்ள காணி இந்த வர்த்தகருக்கு சொந்தமானது எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அவர் மாதாந்தம் 110 லட்சம் வாடகையாக பெறுவதாகவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது. மேலும் இவர் கொழும்பில் உள்ள பிரபல பாடசாலை ஒன்றில் கல்வி கற்றுள்ளார். அந்த பாடசாலைக்கு பல கோடி செலவில் நீச்சல் தடாகம் கூட கட்டியுள்ளதாக விசாரணையில் தெரியவந்துள்ளது.


நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW 


1ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 7ம் வட்டாரம், இராமநாதபுரம், Villetaneuse, France

27 Oct, 2025
1ம் ஆண்டு நினைவஞ்சலி

தெல்லிப்பளை, Tellippalai

06 Nov, 2025
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வேலணை, கரம்பொன், Hamburg, Germany, Newbury Park, United Kingdom

27 Oct, 2020
6ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை கம்பர்மலை

26 Oct, 2020
மரண அறிவித்தல்
8ம் ஆண்டு நினைவஞ்சலி

புங்குடுதீவு 5ம் வட்டாரம், வேலணை கிழக்கு, சுவிஸ், Switzerland

26 Oct, 2018
மரண அறிவித்தல்

கொக்குவில், Duisburg, Germany

24 Oct, 2026
மரண அறிவித்தல்

யாழ்ப்பாணம், Bristol, United Kingdom

12 Oct, 2026
4ம் ஆண்டு நினைவஞ்சலி

வட்டக்கச்சி, St. Gallen, Switzerland

26 Oct, 2022
மரண அறிவித்தல்

கரவெட்டி மேற்கு, Clamart, France

24 Oct, 2026
10ம் ஆண்டு நினைவஞ்சலி
1ம் ஆண்டு நினைவஞ்சலி

அளவெட்டி, கந்தரோடை

04 Sep, 2025
21ம் ஆண்டு நினைவஞ்சலி
மரண அறிவித்தல்

நீர்வேலி, Venlo, Netherlands

22 Oct, 2026
மரண அறிவித்தல்

சாவகச்சேரி, யாழ்ப்பாணம், நுணாவில் மேற்கு, Wellawatte

21 Oct, 2026
மரண அறிவித்தல்

புங்குடுதீவு 2ம் வட்டாரம், Zürich, Switzerland

21 Oct, 2026
மரண அறிவித்தல்
5ம் ஆண்டு நினைவஞ்சலி

குப்பிளான், London, United Kingdom, பிரான்ஸ், France

23 Oct, 2021
1ம் ஆண்டு நினைவஞ்சலி

வல்வெட்டித்துறை, கொழும்பு

03 Nov, 2025
மரண அறிவித்தல்

கொக்குவில் மேற்கு, சென்னை, India, London, United Kingdom

20 Oct, 2026
மரண அறிவித்தல்

சுழிபுரம், கொழும்பு, Toronto, Canada

20 Oct, 2026
மரண அறிவித்தல்

திருநெல்வேலி, யாழ்ப்பாணம், Idar- Oberstein, Germany, Coventry, United Kingdom

18 Oct, 2026
(+44) 20 3137 6284
UK
(+41) 315 282 633
Switzerland
(+1) 437 887 2534
Canada
(+33) 182 888 604
France
(+49) 231 2240 1053
Germany
(+1) 929 588 7806
US
(+61) 272 018 726
Australia
lankasri@lankasri.com
Email US