வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து இளைஞர் மீது தாக்குதல்: பொலிஸார் முன்னிலையில் சம்பவம்
வவுனியா கடவுச்சீட்டு அலுவலகத்தில் வைத்து உத்தியோகத்தர்கள், பொலிஸார் முன்னிலையில் கடவுச்சீட்டு பெற வந்த மட்டக்களப்பைச் சேர்ந்த புலம்பெயர் தமிழர் ஒருவர் மீது தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை இடம்பெற்ற குறித்த தாக்குதல் சம்பவம் தொடர்பான வீடியோ சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகின்றது.
கடவுச்சீட்டு புதுப்பிப்பதற்காக வெளிநாட்டில் இருந்து வருகை தந்த நபர் ஒருவர் மீதே குறித்த தாக்குதல் இடம்பெற்றுள்ளது.
பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள்
கடவுச்சீட்டை புதுப்பிக்க விண்ணப்பித்த குறித்த நபர் தனக்கு பின்னர் அன்றைய தினம் விண்ணப்பித்தவர்களுக்கு கடவுச்சீட்டு முன்னர் வழங்கப்பட்டாமையால் தனது கடவுச்சீட்டு ஏன் இன்னும் வரவில்லை என உத்தியோகத்தர்களுடன் முரண்பட்டுள்ளார்.
இதன்போது, குறித்த அலுவலகத்தில் நின்ற பொலிஸாரை தள்ளி கடமைக்கு இடையூறு விளைவித்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து பொலிஸார் மற்றும் கடவுச்சீட்டு உத்தியோகத்தர்கள் முன்னிலையில் குறித்த நபரை தாக்கி கை கட்டப்பட்டு நிலத்தில் விழுந்து கிடக்கும் காட்சி பதிவாகியுள்ளது. பொலிஸார் தகாத வார்த்தைகளை பேசி குறித்த இளைஞனை தாக்கியுள்ளனர்.
மாபியாக்களுக்கு உடந்தையா என சந்தேகம்
அத்துடன், பொலிஸாருக்கு சார்பாக குறித்த தாக்குதலை மேற்கொண்டவர்கள் குறித்த
கடவுச் சீட்டு அலுவலகம் முன்பாக இடம் பிடித்து கொடுத்தும், கடவுச்சீட்டை
முன்னிலைப்படுத்தி பெற்றுக் கொடுக்கும் மாபியா கும்பலை சேர்ந்தவர் என அறிய
முடிகிறது.
இதேவேளை, அரச கடமைக்கு இடையூறு விளைவித்ததாக குறித்த நபரை பொலிஸார் கைது செய்து நீதிமன்றில் முற்படுத்தி தற்போது விளக்கமறியலில் உள்ளார்.
குறித்த தாக்குதல் சம்பவத்தின் மூலம் கடவுச்சீட்டு அலுவலகம் முன் செயற்படும் மாபியாக்களுக்கும் பொலிஸாரும், உத்தியோகத்தர்களும் உடந்தையா என்ற சந்தேகம் எழுந்துள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP இல் இணையுங்கள் JOIN NOW |





சுகன்யா பற்றிய உண்மை, பளார் விட்டு கோமதி செய்த விஷயம்... பாண்டியன் ஸ்டோர்ஸ் பரபரப்பு எபிசோட் Cineulagam

அறிவுக்கரசிக்கு ஈஸ்வரி கொடுத்த பைனல் டச் என்னா அடி, சக்தி, ஜனனி காதல்.. தரமான எதிர்நீச்சல் புரொமோ Cineulagam

5 போர் விமானங்கள் சுட்டு வீழ்த்தப்பட்டன... ஆபரேஷன் சிந்தூர் தொடர்பில் ட்ரம்ப் மீண்டும் அதிரடி News Lankasri

விஜயாவை வெறிக்கொண்டு அடிக்க வந்த பெண், மீனா செய்த காரியம்.. சிறகடிக்க ஆசை சீரியல் பரபரப்பு கதைக்களம் Cineulagam

Netflix-ல் அதிகம் பார்க்கப்பட்ட தமிழ் திரைப்படம்.. விஜய், அஜித், ரஜினிக்கே முதல் இடம் இல்லையா Cineulagam
