தீவிர பொலிஸ் பாதுகாப்பில் கடவுச்சீட்டு அலுவலகம்
பத்தரமுல்லையில் அமைந்துள்ள குடிவரவு திணைக்களத்தின் கடவுச்சீட்டு வழங்கும் நிலையத்திற்கு விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு கட்டுப்பாட்டாளர் நாயகம் ஹர்ஷ இலுக்பிட்டிய விடுத்த கோரிக்கைக்கு அமைய பிரதான பொலிஸ் பரிசோதகர் தலைமையிலான குழுவொன்றும் கூடுதலாக இணைக்கப்பட்டுள்ளது.
குடிவரவு குடியகழ்வு திணைக்களத்தின் கடவுச்சீட்டு பிரிவில் பல்வேறு குளறுபடிகள் இடம்பெற்றுள்ளதாக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ள நிலையில் இவ்வாறு பொலிஸ் பாதுகாப்பு கோரப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.
இந்த நாட்களில் ஒரு நாள் சேவையின் கீழ் வெளிநாட்டு கடவுச்சீட்டைப் பெறுவதற்கு வருகை தருபவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருப்பதாக குடிவரவு மற்றும் குடியகல்வு கட்டுப்பாட்டாளர் ஹர்ஷ இலுக்பிட்டிய குறிப்பிட்டார்.
கொரிய மொழித் தேர்ச்சிப் பரீட்சை எதிர்வரும் திங்கட்கிழமை முதல் ஆரம்பிக்கப்பட உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

பாகிஸ்தானுக்கு ஆயுதங்களை வழங்கிய நாடுகளில் ரூ.4,000 கோடியை செலவிட்ட இந்திய சுற்றுலாப் பயணிகள் News Lankasri
