குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்கள அதிகாரி CIDயினால் கைது
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தகவல் தொழில்நுட்பம் மற்றும் எல்லைக் கட்டுப்பாட்டுப் பிரிவின் கட்டுப்பாட்டாளர் குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டுள்ளார்.
மென்பொருள் ஒன்றை நிறுவும் போது இடம்பெற்றதாக கூறப்படும் நிதி மோசடி தொடர்பில் இன்று ( 14) கைது செய்யப்பட்டுள்ளார்.
பாதுகாப்பான இடங்களுக்கு செல்லத்தயாராக இருக்கவும்..! பல பகுதிகளுக்கு விடுக்கப்பட்டுள்ள நிலச்சரிவு எச்சரிக்கை
குடிவரவு திணைக்களத்தில் பாரிய முறைகேடு
குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தின் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளுக்கு அமைவாக இந்தக் கைது நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளது.

மென்பொருள் தொகுதி (Software System) ஒன்றினை நடைமுறைப்படுத்துவதற்காக 9.8 மில்லியன் ரூபாவுக்கும் அதிக தொகை செலவிடப்பட்டதாக சந்தேகநபர் எழுத்துப்பூர்வமான பிரகடனம் ஒன்றைச் சமர்ப்பித்துள்ளார்.
எனினும், அத்தகைய மென்பொருள் தொகுதி எதுவும் நடைமுறைப்படுத்தப்படவில்லை என்பது ஆரம்பகட்ட விசாரணைகளில் கண்டறியப்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.
அரசாங்கப் பணத்தை முறையற்ற வகையில் பயன்படுத்தியமை மற்றும் மோசடி செய்தமை தொடர்பில் இவருக்கு எதிராக மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் கடுவலை நீதவான் நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்படவுள்ள நிலையில், குற்றப்புலனாய்வுத் திணைக்களம் இச்சம்பவம் குறித்து மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றது.
இலங்கையில் நிலவும் மோசமான காலநிலை - 24 மணி நேரமும் எச்சரிக்கை நிலையில் அதிகாரிகள்..! விடுக்கப்பட்டுள்ள எச்சரிக்கை
Super Singer Junior: ஒட்டுமொத்த அரங்கத்தையே அழ வைத்த பார்வையற்ற சிறுவன்... புல்லரிக்க வைத்த குரல் Manithan
விபத்தில் சிக்கிய சோழன்.. மருத்துவமனையில் அனுமதி.. கதறி அழும் நிலா.. அய்யனார் துணை சீரியல் Cineulagam