கடவுச்சீட்டு விநியோகம் தொடர்பில் எடுக்கப்பட்டுள்ள தீர்மானம்! வெளியாகியுள்ள அறிவிப்பு
வெளிநாடு செல்லும் நோக்கில் கடவுச்சீட்டு பெறவுள்ளவர்களுக்கு முக்கிய தகவலொன்று வழங்கப்பட்டுள்ளது.
இரண்டு சேவை முறைமைகளின் அடிப்படையில் ஒருநாள் சேவையூடாக கடவுச்சீட்டை விநியோகிப்பதற்கு குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது.
இது தொடர்பில் குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் கட்டுபாட்டாளர் நாயகம் பந்துல ஹரிச்சந்திர மேலும் கூறுகையில்,
ஒருநாள் சேவையை பெறுவதற்காக, நீண்ட வரிசையில் காத்திருக்கும் மக்களின் நலன் கருதி இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
தற்போது நிலவும் நெருக்கடிகளுக்கு மத்தியில் நாள் ஒன்றுக்கு 50 சதவீதமான பணிக்குழாமினரை கொண்டே செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுக்கப்படுகின்றன என குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையிலிருந்து வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தல் |
அறிவுறுத்தல்
இலங்கையிலிருந்து வேலைவாய்ப்பிற்காக வெளிநாடு செல்வோருக்கு அவசர அறிவித்தலொன்று ஏற்கனவே வழங்கப்பட்டுள்ளது.
பணம், கடவுச்சீட்டு அதன்படி எந்தவொரு தரப்பினருக்கும் பணம் அல்லது கடவுச்சீட்டுகளை வழங்குவதற்கு முன்னர் குறித்த நிறுவனங்களின் சட்டபூர்வமான தன்மை தொடர்பில் அவதானம் செலுத்துமாறு அறிவுறுத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பான அவசர அறிவுறுத்தலை இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகம் வழங்கியிருந்தது.
அத்துடன் ருமேனியா, இஸ்ரேல், ஜப்பான் மற்றும் தென் கொரியா போன்ற நாடுகளில் தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட்டுள்ளதாக பல்வேறு சமூக ஊடகங்கள் ஊடாக பொய்யான தகவல்கள் பரப்பப்படுகின்றன.
இதன்மூலம் மோசடியில் ஈடுபடும் குழுவினர் பணம் பறிப்பதற்கு முயற்சிப்பதாக தகவல்கள் கிடைத்துள்ளன.
எனவே, இது குறித்து பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.