நடுவானில் விமானியால் பயணிகளுக்கு நேர்ந்த அவலம்
அமெரிக்காவிலிருந்து சீனா நோக்கிப் பயணித்த விமானமொன்றின் விமானி தமது கடவுச்சீட்டை மறந்து சென்றதால் குறித்த விமானம் மாற்றி அனுப்பப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்சில் இருந்து 257 பயணிகள் மற்றும் 13 பணியாளர்களுடன் சீனாவிற்குப் பயணித்த விமானமே இவ்வாறு தரையிறக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
மற்றுமொரு விமானி பணிக்கு..
புறப்பட்டு கிட்டத்தட்ட இரண்டு மணி நேரத்திற்குப் பின்னர் விமானம் நடுவானில் பறந்து கொண்டிருந்த நிலையில் கடவுசீட்டு தன்னிடம் இல்லை என விமானி அறிந்துள்ளார்.
உடனே விமானம் திரும்பி அமெரிக்காவின் சென் பிரான்சிஸ்கோ சர்வதேச விமான நிலையத்தில் (SFO) தரையிறங்கியுள்ளது.
விமானம் பசிபிக் பெருங்கடலுக்கு மேலே லொஸ் ஏஞ்சல்ஸிலிருந்து பறந்து சென்று பின்னர் கலிபோர்னியாவுக்குத் திரும்பி சென்றது என விமான கண்காணிப்பு வலைத்தளமான Flightradar24 தெரிவித்துள்ளது.
இந்நிலையில், விமான நிறுவனம் இது தொடர்பில் அறிக்கையொன்றை வெளியிட்டு, இதனால் பாதிப்படைந்த தரப்பினரிடம் மன்னிப்பு கோரியுள்ளது.
மேலும், விமானி தமது கடவுச் சீட்டை மறந்து சென்றமையினால் மற்றுமொரு விமானி பணிக்கு அமர்த்தப்பட்டதாகவும் அதனால் விமானம் தாமதமடைந்ததாகவும் அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டு நடப்புகளை உங்கள் கைபேசியில் பெற்றுக்கொள்ள தமிழ்வின் WHATSAPP CHANNEL இல் இணையுங்கள் JOIN NOW |
