இராமேஸ்வரம் - தலைமன்னார் இடையே ஆரம்பிக்கப்படவுள்ள பயணிகள் கப்பல் சேவை..!
இராமேஸ்வரம் மற்றும் இலங்கையின் தலைமன்னார் இடையே சர்வதேச பயணிகள் கப்பல் சேவையை ஆரம்பிப்பதற்காக, தமிழக அரசு இந்திய மத்திய அரசிடம் நிதியுதவி கோரியுள்ளது.
இந்த திட்டத்திற்கான மதிப்பீட்டுச் செலவு 118 கோடி இந்திய ரூபாய்களாகும்.
தமிழக பொதுப்பணித்துறை அமைச்சர் ஆதவ் அர்ஜுனா, இந்திய கப்பல் போக்குவரத்துத் துறை அமைச்சர் சர்பானந்த சோனோவாலைச் சந்தித்து இந்தக் கோரிக்கையை முன்வைத்துள்ளார்.
இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம்
இராமேஸ்வரத்திற்கும் தலைமன்னாருக்கும் இடையிலான தூரம் சுமார் 26 கடல் மைல்கள் உள்ளன.

இந்த சேவையை மீண்டும் ஆரம்பிக்க இரு நாடுகளுக்கும் இடையிலான ஒப்பந்தம், குடிவரவு மற்றும் சுங்க வசதிகள், கடல்சார் பாதுகாப்பு உள்ளிட்ட ஏற்பாடுகள் அவசியம்.
ஏற்கனவே நாகப்பட்டினம் – காங்கேசன்துறை இடையிலான கப்பல் சேவை முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில், புதிய திட்டம் இலங்கை - இந்தியாவுக்கு இடையிலான சுற்றுலா, வர்த்தகம் மற்றும் போக்குவரத்து தொடர்புகளை மேலும் வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த திட்டம் இன்னும் முன்மொழிவு மற்றும் அனுமதி பெறும் கட்டத்திலேயே உள்ளது.