கட்டுநாயக்க விமான நிலையத்தில் கைதான வெளிநாட்டவர்
கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் சீனப் பிரஜை ஒருவர் இன்று அதிகாலை கைது செய்யப்பட்டுள்ளார்.
சுமார் 3 கோடி 44 லட்சத்து 74 ஆயிரம் ரூபாய் பெறுமதியான சீனத் தயாரிப்பு சிகரெட்டுகளுடன் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
விமான நிலைய சுங்க அதிகாரிகளால் மேற்கொள்ளப்பட்ட சோதனையின் போதே இவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
கைதான வெளிநாட்டவர்
கைதான 35 வயதுடைய சீனத் தொழிலதிபர் இலங்கைக்கு வருகை தரும் மூன்றாவது சந்தர்ப்பம் இதுவாகும்.

சீனாவில் இருந்து சிகரெட்டுகளை கொள்வனவு செய்து, தாய்லாந்தின் பேங்கொக் நகரிற்கு சென்று, அங்கிருந்து தாய் எயார்வேஸ் நிறுவனத்தின் TG-307 விமானம் மூலம் இன்று அதிகாலை 12.55 மணிக்கு அவர் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்துள்ளார்.
மேலதிக சட்ட நடவடிக்கை
சந்தேகநபர் கொண்டு வந்த 13 பயணப் பைகளில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், 8 வகையான 229,800 சிகரெட்டுகள் சுங்க அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளன.

கைது செய்யப்பட்ட சந்தேகநபர் மற்றும் கைப்பற்றப்பட்ட சிகரெட் தொகையினை மேலதிக சட்ட நடவடிக்கைகளுக்காக சுங்க அதிகாரிகள் பொறுப்பேற்றுள்ளனர்.