பலத்த எதிர்ப்புக்களுக்கு மத்தியில் நிறைவேறியது கொழும்பு துறைமுக நகர் சட்டமூலம்
கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்ட மூலம் 89 மேலதிக வாக்குகளினால் நிறைவேற்றப்பட்டுள்ளது.
இந்த சட்ட மூலம் குறித்த இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு சற்று முன்னர் நடைபெற்றது.
இதில் சட்ட மூலத்திற்கு ஆதரவாக 148 வாக்குகளும் எதிராக 59 வாக்குகளும் அளிக்கப்பட்டன.
இதன்படி 89 மேலதிக வாக்குகளினால் கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழு சட்டம் நாடாளுமன்றில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ரிஷாட் பதியூதீனின் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் நாடாளுமன்ற உறுப்பினரான எஸ்.எம் ரஹீம், போர்ட் சிட்டி ஆணைக்குழு தொடர்பிலான சட்டமூலம் மீதான இரண்டாம் வாசிப்பு மீது வாக்கெடுப்பில் ஆதரவாக வாக்களித்துள்ளார்.
இவர் கடந்த 20ஆவது திருத்தத்திற்கான வாக்கெடுப்பிலும் ஆதரவாகவே வாக்களித்திருந்தார்.