பிரான்சில் இன்று முதல் கட்டாயமாக்கப்படும் சுகாதார பாஸ்
பிரான்சில் இன்று முதல் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் சுகாதார பாஸ் (pass sanitaire) கட்டாயமாக்கப்படுவதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
அதன்படி கபேக்கள், உணவகங்கள், திரையரங்குகள், அரங்குகள், உடற்பயிற்சி கூடங்கள் மற்றும் விளையாட்டு அரங்குகள் போன்ற இடங்களுக்குச் செல்லும் 12 வயதிற்கு மேற்பட்டவர்கள் சுகாதார பாஸ் வைத்திருப்பது கட்டாயம் என கூறப்படுகிறது.
என்றபோதும் பள்ளிகள், வகுப்புகள், கல்வி நிலையங்களுக்குச் செல்ல இந்த சுகாதார பாஸ் தேவையில்லை எனவும் கூறப்படுகிறது.
எனினும் சுகாதார பாஸ் இல்லையென்பது தண்டனைக்குரிய குற்றம் என அரசு இன்னும் அறிவிக்கவில்லை என்றும் குறிப்பிடப்படுகிறது.
மேலும், பிரான்சில் 12 வயதிற்கு மேற்பட்ட அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக் கொள்ள வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.