சீன அமைச்சரின் வருகையுடன் திறக்கப்படும் துறைமுக நகரின் ஒரு பகுதி
கொழும்பு துறைமுக நகரில் பொது மக்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள பொது நடைபாதையின் ஒரு பகுதி இந்த வார இறுதியில் திறக்கப்படவுள்ளது.
இந்த பகுதி காலிமுகத் திடலில் இருந்து கால் நடையாக செல்லக் கூடிய பகுதி என்பதுடன் கடலுடன் இணையும் பாலமும் உள்ளது.
சீன வெளிவிவகார அமைச்சர் வேங்க் ஹியின் (Wang Yi) இலங்கைக்கான உத்தியோகபூர்வ விஜயத்தின் போது துறைமுக நகரின் இந்த பகுதி திறந்து வைக்கப்படவுள்ளது. சீன வெளிவிவகார அமைச்சர் நாளைய தினம் இலங்கை வரவுள்ளார்.
சீனாவுக்கும் இலங்கைக்கும் இடையிலான ராஜதந்திர உறவுகள் ஆரம்பிக்கப்பட்டு 65 வருட பூர்த்தியை முன்னிட்டு அவரது விஜயம் அமைந்துள்ளது.
சீன நிறுவனம் ஒன்றினால், நிர்மாணிக்கப்பட்டு வரும் கொழும்பு துறைமுக நகரம், விசேட ஆணைக்குழுவின் கீழ் நிர்வகிக்கப்படவுள்ளது. நகரத்தின் கட்டுமானப் பணிகள் ஏற்கனவே ஆரம்பிக்கப்பட்டு நடைபெற்று வருகிறது.