இதுவரையில் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்த மக்களின் கவனத்தை ஈர்த்த தமிழரின் முயற்சி
கிளிகளுடன் புகைப்படங்கள் எடுப்பதற்காக வட மாகாணத்திலிருந்து மக்கள் ஹம்பாந்தோட்டையை நோக்கி படையெடுத்து செல்வது வழக்கம்.
இவ்வாறு ஹம்பாந்தோட்டையை நோக்கி செல்லும் மக்களின் கவனத்தை தற்போது றீ(ச்)ஷா பண்ணையின் 'அவந்திகை அகம்' என்ற கிளிகள் சரணாலயம் ஈர்த்துள்ளது.
கிளிநொச்சி - பச்சிலைப்பள்ளி பிரதேச சபைக்குட்பட்ட இயக்கச்சி பகுதியில் அமைந்துள்ள ஓர் சுற்றுலாதலமே றீ(ச்)ஷா பண்ணை ஆகும்.
றீ(ச்)ஷா பண்ணை பல ஆயிரக்கணக்கிலான தென்னை மரங்கள் சூழ மிக அழகாக காட்சியளிக்கும் பண்ணையாகும். இப் பண்ணை சுமார் 150 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது.
அங்கு பல புதுப்புது முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் நிலையில் தற்போது அவந்திகை அகம் என்ற பெயரில் பல வகை கிளிகளுடன் புகைப்படங்கள் எடுத்து மகிழ்வதற்கான ஒரு தளம் அமைக்கப்பட்டுள்ளது.
ReeCha Organic பண்ணையின் அவந்திகை அகம் தொடர்பிலான முழுமையான தகவல்களை தொகுத்து வழங்குகிறது இக் காணொளி,