பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை கோரும் நாடாளுமன்ற உறுப்பினர்கள்
இலங்கையின் நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் சுமார் 20 உறுப்பினர்கள் பாதுகாப்பிற்காக துப்பாக்கிகளை வழங்குமாறு கோரிக்கை முன்வைத்துள்ளனர்.
தனிப்பட்ட பாதுகாப்புக்காக துப்பாக்கி வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளதாக நாடாளுமன்ற வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
இந்த கோரிக்கைகள் நாடாளுமன்றம் மற்றும் பாதுகாப்புப் படையினரின் தொடர்புடைய அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்பட்டுள்ளதாகவும் பின்னர், இந்த கோரிக்ககைள் பாதுகாப்பு அமைச்சின் பரிசீலனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

அண்மையில் நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பு குறித்து காவல் துறை மா அதிபர் பங்கேற்ற சிறப்பு கலந்துரையாடல் ஒன்று நடைபெற்றது.
அந்த கலந்துரையாடலுக்கு பின், நாடாளுமன்ற சபாநாயகர் மற்றும் காவல் துறை மா அதிபர் இணைந்து, நாடாளுமன்ற உறுப்பினர்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கான தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என இணங்கப்பட்டிருந்தது.
எனினும், அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் துப்பாக்கிகள் வழங்கும் தீர்மானம் எடுக்கப்படவில்லை.
தற்போது நிலவும் பாதுகாப்பு அச்சுறுத்தல்களின் மதிப்பாய்வினை அடிப்படையாகக் கொண்டு துப்பாக்கி வழங்கல் குறித்து முடிவு எடுக்கப்படும் என நாடாளுமன்ற வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.