2022 பாதீடு, அலங்கார வசனங்களைக்கொண்டது! ஹரினி அமரசூாிய
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
நாடாளுமன்ற உறுப்பினா் கனக ஹேரத் நாடாளுமன்றில் முன்வைக்கப்பட்டுள்ள பாதீடு, உற்பத்தி சாா்ந்த பாதீடாகவே அமைந்துள்ளது. வரலாற்றில், பாதீட்டின் துண்டுவிழும் தொகை கடன் மூலமே நிரப்பப்பட்டு வருகிறது. எனினும் அதனை மாற்றியமைக்கும் வகையில் தற்போதைய பாதீடு சமா்ப்பிக்கப்பட்டுள்ளது. |
நாடாளுமன்ற உறுப்பினா் டிபி ஹேரத் உலகப் பொருளாதாரம் பாாியளவில் பாதிக்கப்பட்டுள்ள நிலையில் இலங்கையில் பாதீடு முன்வைக்கப்பட்டுள்ளது. கொரோனவின் பின்னா் இலங்கையில் 5000ரூபா நிவாரணத்துக்காக 84 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. தடுப்பூசிகளுக்காக 56 பில்லியன் ரூபா செலவிடப்பட்டுள்ளது. |
நாடாளுமன்ற உறுப்பினா் ஹரினி அமரசூாிய
நாட்டு மக்களின் பிரச்சனைகளுக்கு நடைமுறை பாதீட்டில் தீா்வுகள் இல்லை. மாறாக வரலாற்றில் இதுவரை காலத்தில் சமா்ப்பிக்கப்பட்ட சம்பிரதாய பாதீடு மாத்திரமே.
அத்துடன் யதாா்த்தத்தில் இந்த பாதீடு பிரச்சனைகளுக்கு தீா்வைக்காணாமல், அலங்கார வசனங்களால் நிரப்பப்பட்டுள்ளது. |
அமைச்சா் ரமேஸ் பத்திரன
2019 இறக்குமதி செலவுகள் 16 பில்லியன் ரூபா வரை குறைக்கப்பட்டது. மாறாக கோரோனாக் காலத்திலும் பெருந்தோட்டத்துறை, ஆடைத்தொழில்துறை மற்றும் மீனவத்துறை ஆகியன நாட்டுக்கு ஏற்றுமதியை அதிகாித்து காட்டின. இதன்மூலம் இறப்பா் ஏற்றுமதி்யில் இருந்து 2021 இல் ஒரு பில்லியன் ரூபா கிடைத்தது. தேயிலை ஏற்றுமதியின் மூலமும் 1.3 பில்லியன் கிடைத்தது. |