புதிய சபாநாயகரின் அதிகாரபூர்வ இல்லம் தொடர்பில் வெளியான தகவல்
புதிய சபாநாயகர் ஜகத் விக்ரமரட்ன தனக்கான அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்துவதில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த டிசம்பர் மாதம் 14ம் திகதி பத்தாம் நாடாளுமன்றின் புதிய சபாநாயகராக ஜகத் விக்ரமரட்ன தெரிவு செய்யப்பட்டார்.
எனினும் அன்று முதல் இன்று வரையில் நாடாளுமன்றிற்கு அருகாமையில் அமைந்துள்ள அதிகாரபூர்வ இல்லத்தை பயன்படுத்தவில்லை என நாடாளுமன்றத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
சபாநாயகர் அலுவலகம்
எனினும் அமர்வுகள் நடைபெறும் தினத்திலும் நடைபெறாத சில நாட்களிலும் சபாநாயகர் அலுவலகத்திற்கு வருகை தருவதாகவும், அவர் எங்கு தங்கியிருக்கின்றார் என்பது தெரியவில்லை எனவும் நாடாளுமன்ற பணியாளர்கள் தெரிவிக்கின்றனர்.
ஜகத் விக்ரமரட்ன கடந்த பொதுத் தேர்தலில் பொலனறுவை மாவட்டத்தில் போட்டியிட்டு வெற்றியீட்டியவர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய மக்கள் சக்தியின் முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வல பதவி விலகியதனைத் தொடர்ந்து ஜகத் விக்ரமரட்ன அந்தப் பதவிக்கு நியமிக்கப்பட்டார்.
ரணில் அரசாங்கத்தின் முன்னாள் அமைச்சர் செய்த மிகப்பெரிய மோசடி! அதிரடி நடவடிக்கைகளுக்கு தயாராகும் அநுர அரசு
தமிழர் அரசியலும் சிங்கள பௌத்த அரசியல் மனநிலையும்.. 16 மணி நேரம் முன்
பராசக்தி பட சம்பளம் பாக்கி.. வழக்கு தொடர்ந்த இயக்குநர் சுதா கொங்கரா.. வெளிவருமா இதயம் முரளி Cineulagam
புகலிடக்கோரிக்கையாளர்கள் 10,000 பவுண்டுகள் செலுத்தவேண்டும்... அறிமுகமாகும் புதிய சட்டம் News Lankasri
12 ஆண்டுகளுக்குப் பிறகு நிகழும் குரு–சூரியன் சேர்க்கை : உச்சகட்ட அதிர்ஷ்டம் பெறும் டாப் 4 ராசிகள்! Manithan