ஜனாதிபதியின் உத்தரவை மீறிய பொலிஸ் மா அதிபர்! உண்மையை வெளிப்படுத்திய அரசாங்க நாடாளுமன்ற உறுப்பினர்
காலிமுகத்திடல் போராட்டத்துக்கு தாக்குதல் நடத்தப்பட்டபோது அதனை தடுக்குமாறு ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ச, உத்தரவிட்டபோதும், பொலிஸ் மா அதிபரே அதனை தடுத்ததாக நாடாளுமன்ற உறுப்பினர் ரமேஸ் பத்திரன தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய அவர், மகிந்த ராஜபக்ச முன்னாள் பிரதமர், பதவி விலகிச் செல்லும்போது, அவருக்கு பிரியாவிடை வழங்குவதற்காக தாமும் அலரி மாளிகைக்கு சென்றிருந்ததாக குறிப்பிட்டார்.
இதன்போது வந்திருந்த மக்கள் பிரதிநிதிகள் சிலர், கூட்டத்துக்கு வந்திருந்தவர்கள் மத்தியில் கோபத்தை ஏற்படுத்தும் வகையில் செயற்பட்டதாகவும், இதனையடுத்தே சிலர் காலிமுகத்திடல், தாக்குதலுக்கு சென்றதாகவும் ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
எனினும் தாம் பொலிஸ் அதிகாரி தேசபந்து தென்னகோனை தொடர்புகொண்டபோது, தாம் தாக்குதலை தடுக்க அனைத்து செயற்பாடுகளையும் மேற்கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டதாக ரமேஸ் பத்திரன தெரிவித்தார்
இதன் பின்னர், தாம், ஜனாதிபதியுடன் சந்திப்பு ஒன்றுக்காக சென்றிருந்தபோது, தாக்குதல் தீவிரமடைந்தமை குறித்து தகவல் வ்ந்ததும், ஜனாதிபதிக்கு அதனை தெரிவித்ததாக ரமேஸ் பத்திரன குறிப்பிட்டார்.
இதன்போது ஜனாதிபதி, தேசபந்து தென்னகோனுடன் தொடர்புக்கொண்டு வினவியபோது, தாக்குதல்கார்கள் மீது பொலிஸ் மா அதிபரே தம்மை கண்ணீர் புகைப்பிரயோகம் செய்யவேண்டாம் என்று அவர் கூறியதாக, ரமேஸ் பத்திரன தெரிவித்தார்.
எனினும் தாம் நாட்டின் ஜனாதிபதி உத்தரவிடுகின்றபோது அதனை நிறைவேற்றுமாறு தெரிவித்த பின்னரே, தாக்குதல்கார்கள் மீது கண்ணீர் புகைப்பிரயோகம் மேற்கொள்ளப்பட்டது என்று ரமேஸ் பத்திரன கூறினார்.
இதன் காரணமாக, இந்த தாக்குதல் இடையிலேயே நிறுத்தப்பட்டது. என்றும் பத்திரன தெரிவித்தார்.

ஏமன் நாட்டில் மரண தண்டனைக்காக காத்திருக்கும் கேரள செவிலியர்: இந்திய உச்சநீதிமன்றத்தின் முடிவு News Lankasri

ரூ.45,000க்கும் குறைவான விலையில் Hero electric scooter வாங்கலாம்.., குறுகிய கால சலுகை மட்டுமே News Lankasri

கழுத்தில் தாலி ஏறிவுடன் மொத்தமாக மாறிய சீதா.. வாழ்க்கை இழந்த மீனா- பரிதவிப்பில் குடும்பத்தினர் Manithan
