அரசாங்கத்தில் துடுப்பாட்ட வீரர்கள் இல்லை! இதன் காரணமாகவே அலி சப்ரி நைட்வொட்ச்மேனாக இறக்கப்பட்டுள்ளார்
நாடாளுமன்றத்தை விளையாட்டாக மாற்றிய அலி சப்ரி, காரணமாகவே இன்று நாடு பாரிய பிரச்சினைக்கு முகங்கொடுத்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வேலு குமார் தெரிவித்துள்ளார்
இன்றைய அரசாங்கத்தில் துடுப்பாட ஒருவரும் இல்லாமை காரணமாகவே சப்ரியை நைட் வொட்ச்மேனாக களமிறக்கியுள்ளார்கள் என்று அவர் இன்று நாடாளுமன்றில் குறிப்பிட்டுள்ளார்.
இந்த நாட்டின் நீதியமைச்சராக கடமையாற்றும் அலி சப்ரியே தனிமனிதனுக்கு 20வது திருத்தத்தின் மூலம் அதிக அதிகாரத்தை பெற்றுக்கொடுத்து நாட்டை பிரச்சினைக்கு உள்ளாகியுள்ளார்.
எனவே கோட்டாவை போன்று அலி சப்ரியும் விரட்டியடிக்கப்படவேண்டும் என்று வேலு குமார் தெரிவித்துள்ளார்.
இதேவேளை நுவரெலிய மாவட்டத்தில் தேயிலை, விவசாயம் மற்றும் சுற்றுலாத்துறை என்று மூன்று துறைகளும் வீழ்ச்சியடைந்துள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் வீ ராதாகிருஸ்ணன் தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில் மலையகத்தின் கட்சி ஒன்று ஆளும் கட்சியில் விலகிவிட்டதாக கூறிவிட்டு இன்று ஆளும் கட்சியுடன் இணைந்து வாக்களித்ததாக ராதாகிருஸ்ணன் குற்றம் சுமத்தினார்.



