தமிழரசு கட்சியை நிராகரிக்க தொடங்கியவர்களின் செயற்பாடு கட்சியை மீட்டெடுக்கும் - தவராசா கலையரசன்
கடவுள் தான் தமிழர்களை காப்பாற்ற வேண்டும் என்பதனை தமிழர்கள் உணர தொடங்கியுள்ளனர். தமிழரசு கட்சியை நிராகரிக்க தொடங்கியவர்களின் செயற்பாடு கட்சியை மீட்டெடுக்கும் என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் தவராசா கலையரசன் தெரிவித்துள்ளார்.
அம்பாறை - திருக்கோவில் பிரதேசத்தில் இலங்கைத் தமிழரசுக் கட்சியின் ஸ்தாபகர் தந்தை செல்வாவின் 44ஆவது நினைவேந்தல் நிகழ்வு இன்று அனுஷ்டிக்கப்பட்டுள்ளது.
இதன்போது தந்தை செல்வாவின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி அஞ்சலி செலுத்தப்பட்டது.இங்கு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.மேலும் தெரிவிக்கையில்,
சிங்கள தேசம் தமிழர்கள் மீது தனி சிங்கள மொழி சட்டம் உள்ளிட்ட அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விட்டபோது தமிழ் மக்களின் உரிமைகளை பாதுகாக்க அகிம்சையை ஆயுதமாக்கி போராடிய பெருந்தலைவர் தந்தை செல்வா அவர்கள் மலையக மக்களின் உரிமையை மீட்டெடுக்கவும் பாடுபட்ட தலைவரினால் உருவாக்கப்பட்ட கட்சி என்றும் தமிழர்களின் உரிமைக்காக எப்போதும் பாடுபடும்.
கடந்த தேர்தல் காலங்களில் எமது கட்சியை வீழ்த்த பாடுபட்டவர்கள் இன்று அதற்கான அடியை இன்று தமிழ் மக்கள் கொடுக்க தொடங்கியுள்ளனர்.
இந்த நாட்டில் பலம் பொருந்திய ஆயுத போராட்டம் இருந்தது . அதன் தொடக்கம் தந்தை செல்வாவின் தீர்க்க தரிசனத்தோடு ஒப்பீட்டு பார்க்கப்பட வேண்டியுள்ளது என தெரிவித்துள்ளார்.
இந்த நிகழ்விற்கு காரைதீவு பிரதேச சபை தவிசாளர் கிருஷ்ணப்பிள்ளை ஜெயசிறில், திருக்கோவில் பிரதேச சபை உறுப்பினர் காந்தரூபன், இலங்கை தமிழரசு கட்சியின் பொத்துவில் கிளை தலைவர் கலாநேசன், கட்சியின் ஆதரவாளர்கள் ஆகியோருடன் சுகாதார நடைமுறைகளுடன் நடைபெற்றது.
சமந்தா கர்ப்பமாக உள்ளாரா? சமூக வலைதளங்களில் குவியும் வாழ்த்துகள்; ரசிகர்கள் மத்தியில் பரபரப்பு Manithan
ஈரான் ஒப்பந்தத்துக்குப் பிறகு ஹார்முஸை கடந்த முதல் 3 எண்ணெய் கப்பல்கள்., மத்திய கிழக்கில் தொடரும் பதற்றம் News Lankasri
புதன் - சுக்கிரன் உருவாக்கும் லட்சுமி நாராயண ராஜயோகம் : இந்த 3 ராசிகளுக்கு டபுள் ஜாப்பாட் உறுதி! Manithan