ஆளும் தரப்புக்குள் ஏற்பட்டது முறுகல்! கோட்டாபயவின் ஆட்சி தொடா்பில் வெளியிடப்பட்டுள்ள அறிக்கை
பிரதமர் மஹிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அரசாங்கத்தின் மீது பொதுமக்கள் நம்பிக்கை இழந்து வருவதாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தெரிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் சில அறிக்கைகள் மற்றும் எடுக்கப்பட்ட தீர்மானங்கள் தொடர்பில் பொதுமக்கள் அதிருப்தியடைந்துள்ளார்கள் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
இந்தநிலையில், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி, அடுத்த தேர்தலுக்கு முன்னதாக தம்மைப் பலப்படுத்திக்கொள்ளும் என அவர் கூறியுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியில் ஏற்பட்டுள்ள சில பிரச்சினைகள் காரணமாகவே கட்சி பலவீனமடைந்துள்ளதாக அவர் தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி இழந்த இடத்தை மீளப் பெற்றுக்கொள்ளும் என்று நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேனவுக்கு எதிராக அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே வெளியிட்ட அறிக்கையினால் இரண்டு கட்சிகளுக்கு இடையில் முறுகல் ஏற்பட்டுள்ளது
ஏற்கனவே ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் உறுப்பினர்கள் இணைந்த நிலையிலேயே, அரசாங்கத்திற்கு 2/3 பெரும்பான்மை இருப்பதாக ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் தலைவர் மைத்ரிபால சிறிசேன ஏற்கனவே குறிப்பிட்டிருந்தார்.
மேலும், அமைச்சர் மஹிந்தானந்த அளுத்கமகே தமக்கு எதிராக வெளியிடும் அறிக்கைகளினால் ஏற்படும் விளைவுகள் குறித்தும் அவர் அரசாங்கத்திற்கு எச்சரிக்கை விடுத்திருந்தார்.

ரபேல் போர் விமானத்திற்கு பின்னடைவா? பங்கு சந்தையில் முந்தும் சீனாவின் J-10 போர் விமானம் News Lankasri

வினோதினி சீரியலை தொடர்ந்து சன் டிவியில் வரப்போகும் புதிய தொடர்.. நாயகி இவரா, படப்பிடிப்பு தள போட்டோ Cineulagam

தாஸ் படத்தில் ரவி மோகன் ஜோடியாக நடித்த நடிகையை நினைவு இருக்கா! இப்போது எப்படி இருக்கிறார் தெரியுமா Cineulagam
