மரக்கறிகளின் விலையுயா்வு, மூன்று மாதங்களுக்குள் இயல்புக்கு வரும் - எதிா்பாா்க்கும் பசில் ராஜபக்ச
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் ஒரே நாடு என்ற அடிப்படையில் வடக்குகிழக்குக்கும் ஏனைய பகுதிகளை போன்று நிதியொதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக நிதியமைச்சர் பசில் ராஜபக்ச தெரிவித்துள்ளார்
பாதீட்டின் இரண்டாம் வாசிப்புக்கான வாக்கெடுப்புக்கு முன்னர், விவாதத்துக்கு பதிலளித்து உரையாற்றியபோதே பசில் ராஜபக்ச இதனை குறிப்பிட்டார்.
தமது பாதீட்டில் கொள்கை தொடர்பான யோசனைகள் சமா்ப்பிக்கப்பட்டுள்ளன. இந்தநிலையில் விவாதத்தின்போது முன்வைக்கப்பட்ட யோசனைகள் தொடர்பில் கவனம் செலுத்தப்படும் என்று அவர் குறிப்பிட்டார்.
அரச சேவையின் சம்பள முரண்பாடுகளை களைந்துப் புதிய திட்டம் ஒன்று தேசிய சம்பள ஆணைக்குழுவிடம் சமா்ப்பிக்கப்படும்.
அத்துடன் சுகாதார துறையில் சம்பள முரண்பாடுகள் தீர்க்கப்படும் என்று பசில் ராஜபக்ச குறிப்பிட்டார்
மழை காரணமாக ஏற்பட்டுள்ள மரக்கறிகளின் மற்றும் அத்தியாவசிய பொருட்களின் விலை உயா்வு, அடுத்த மூன்று மாதங்களில் இயல்பு வரும் என்று எதிா்பாா்க்கப்படுவதாக பசில் தெரிவித்தார்.

பாகிஸ்தான் ராணுவ தளங்களை தாக்கிய இந்திய விமானப்படை: BrahMos பயன்படுத்தப்பட்டிருக்க வாய்ப்பு News Lankasri

இனியா செய்த விஷயம்.. ஷாக் ஆன வில்லன்! நம்பர் 1 ட்ரெண்டிங்கில் பாக்கியலட்சுமி அடுத்த வார ப்ரோமோ Cineulagam
