இலங்கையில் சிறுவர் பாலியல் துஸ்பிரயோக வலையமைப்பு- இந்தியாவில் 7பேர் கைது
இலங்கை உட்பட பல நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வந்த சர்வதேச இணையம் மூலமான சிறுவர் பாலியல் துஸ்பிரயோக வலையமைப்பு தொடர்பில், இந்தியாவின் மத்திய புலனாய்வுப் பிரிவு(சிபிஐ) ஏழு பேரைக் கைது செய்துள்ளது.
13 மாநிலங்கள் மற்றும் ஒரு யூனியன் பிரதேசத்தில் வைத்து அவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
100 நாடுகளில் மேற்கொள்ளப்பட்டு வரும் 5,000 பேரை உள்ளடக்கியதாகக் கூறப்படும் சிறுவர் பாலியல் துஷ்பிரயோக செயற்பாடு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து அவர்கள் கைதுசெய்யப்பட்டதாக சிபிஐ தெரிவித்துள்ளது.
பாகிஸ்தான், அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, நைஜீரியா, கானா, பங்களாதேஷ், இலங்கை, அஜர்பைஜான், எகிப்து, ஏமன், மலேசியா மற்றும் இந்தோனேசியா போன்ற நாடுகளைச் சேர்ந்தவர்கள் இதில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த வலையைமைப்பில் மேற்கொள்ளப்பட்ட தேடுதலின்போது பாகிஸ்தானில் 36, கனடா மற்றும் இங்கிலாந்தில் 35, பங்களாதேஷில் 31, இலங்கையில் 30, நைஜீரியாவில் 28, அஜர்பைஜானில் 27, ஏமனில் 24 மற்றும் மலேசியாவில் 22 என்ற எண்ணிக்கையில் தொலைபேசி எண்கள் கண்டறியப்பட்டுள்ளதாக சிபிஐ தெரிவித்துள்ளது.