சிகரட்டின் விலையை 5 ரூபாவால் அதிகரித்தமைக்கான காரணம்? எதிா்க்கட்சி கேள்வி
“பேப்பச்சுசல் டெசரீஸின்“ 8500 கோடி ரூபாவை இந்த பாதீட்டின் ஊடாக, அரச நிதிக்குள் கொண்டு வந்தமைக்கு நல்லாட்சி அரசாங்கமே காரணம் என்று நாடாளுமன்ற உறுப்பினர் ராஜித சேனாரத்ன (Rajitha Senaratne ) தெரிவித்துள்ளார்.
மத்திய வங்கியின் முன்னாள் ஆளுநர் அர்ஜூன் மஹேந்திரனை இலங்கைக்கு அழைத்து வர முடியாது போனாலும், பேப்பச்சுவல் ரெசரீஸின் 12000 கோடி ரூபாவை மத்திய வங்கி தம்வசம் வைத்திருந்தது.
இதில் 8500 கோடியையே அரசாங்கம் கொண்டு வந்துள்ளது.
எனவே அரசாங்கத்துக்கு இந்த விடயத்தில் எவ்வித நட்டமும் ஏற்படவில்லை என்று ராஜித சேனாரட்ன தொிவித்தார்.
எனினும் இதன் மூலம் அரசாங்கம், 3500 கோடி ரூபாவை, அர்ஜூன் அலோசியஸூக்கு வழங்கியுள்ளதாக ராஜித சேனாரத்ன தொிவித்தார்.
இதற்கிடையில் பாதீட்டின் ஊடாக சிகரட்டின் விலை 5 ரூபாவால் மாத்திரமே உயர்த்தப்பட்டுள்ளது.
எனினும் நல்லாட்சி அரசாங்க காலத்தில் சிகரட்டின் விலை 90 வீதத்தால் உயர்த்தப்பட்டதாக சேனாரத்ன சுட்டிக்காட்டினார்.
இது குறித்த நிறுவனங்களுடன் அரசாங்கத்துக்கு இருக்கும் நட்பு காரணமாக இருக்கலாம் என்று அவர் குறிப்பிட்டார்.
இதேவேளை மத்திய வங்கியின் ஆளுநா்- அஜித் நிவாட் கப்ரால், கடந்த செப்டம்பர் 15ஆம் திகதி வரை 1500 ரில்லியன் ரூபாவை அச்சிடப்பட்டுள்ளார்.
இதன் காரணமாக நாட்டில் பணவீக்கம் பாரியளவில் அதிகாித்துள்ளது என்றும் ராஜித சேனாரத்ன தொிவித்தார்.
இன்று இலங்கையின் வங்கிகளின் ஊடாக விநியோகிக்கப்படும் கடன் அட்டைகளை, வெளிநாட்டு இறக்குமதி பொருட்களின் விநியோகஸ்தர்கள் ஏற்றுக்கொள்ள மறுக்கின்றனர்.
சா்வதேச வங்கிகளின் ஊடாக வங்கிக்கடன் அட்டைகளை விநியோகிக்குமாறு அந்த விநியோகஸ்தர்கள் வலியுறுத்துகின்றனர்.
அவ்வாறு செய்யும் போது ,அந்த சர்வதேச வங்கிகளுக்கு இறக்குமதியாளா்களால் 5வீத கட்டணங்களை செலுத்தவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது என்று ராஜித சேனாரத்ன குறிப்பிட்டார்.