தமிழர் போராட்டத்தில் உயிர் நீத்தவர்களை நினைவுகூர தடை வேண்டாம்: நாடாளுமன்றில் கோரிக்கை
2022ஆம் ஆண்டுக்கான பாதீட்டில் அமைச்சகங்களுக்கு ஒதுக்கப்பட்ட 5200 மில்லியன் ரூபாயில் ராஜபக்சர்களின் குடும்பத்தைச் சோ்ந்த அமைச்சகங்களுக்கு மாத்திரம் 3470 மில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டுள்ளது. இது பாதீட்டு ஒதுக்கீட்டில் 60 வீத ஒதுக்கீடாகும் என்று தேசிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திசாநாயக்க தெரிவித்துள்ளார்.
பாதீட்டின் இரண்டாம் வாசிப்பு 6 நாள் விவாதத்தில் பங்கேற்று உரையாற்றியபோதே அவர் இதனைக் குறிப்பிட்டார். |
கோட்டாபய ராஜபக்ச 2019ஆம் ஜனாதிபதியாக தொிவுசெய்யப்படாமல், சஜித் பிரேமதாச ஜனாதிபதியாக பொறுப்பேற்றிருந்தாலும் தற்போதைய பொருளாதாரப் பிரச்சனை ஏற்பட்டிருக்காதா? என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.
அமைச்சர் உதய கம்மன்பில இந்தக்கேள்வியை இன்று எழுப்பியுள்ளார். |
தமிழர் போராட்டத்தில் பங்கேற்று உயிர்நீத்த அனைவரையும் நினைவுக்கூருவதற்கு எந்த தடையும் விதிக்கப்படக்கூடாது என்று நாடாளுமன்ற உறுப்பினர் வினோநோகராலிங்கம் இன்று கோரிக்கை விடுத்துள்ளார். நாடாளுமன்றத்தில் இன்று உரையாற்றிய அவர், இன்று அமைக்கப்பட்டுள்ள செயலணிகள் காரணமாக எந்த பயனும் இல்லை என்று அவர் குறிப்பிட்டார். |