வடக்குகிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் தொடா்வதாக கஜேந்திரகுமார் குற்றச்சாட்டு
வடக்குகிழக்கின் குடிப்பரம்பலை மாற்றும் முயற்சிகள் தொடா்வதாக நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் குற்றம் சுமத்தியுள்ளார். 35 வருடக்காலத்தில் தடை செய்யப்பட்டிருந்த வடக்கின் மீன்பிடி இன்னும் இயல்பு நிலைக்கு கொண்டு வரப்படவில்லை. அதேநேரம் நுாற்றுக்கணக்கான விவசாய நிலங்கள் இதேபோன்று சுவீகாிக்கப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினா் கஜேந்திரகுமாா் பொன்னம்பலம் தொிவித்துள்ளார்.
இந்தநிலையில் இலங்கையில் இழப்பதற்கு எதுவுமே இல்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார். |
தெற்கில் கொல்லப்பட்ட பிரேமவதி மனப்போி முதல் வடக்கின் இசைப்பிரியா வரையிலானவர்களின் நிலைமைக்கு நேற்று “சந்தஹிரு செய” நிகழ்வின்போது எடுக்கப்பட்ட புகைப்படங்கள் சான்றாக அமைக்கின்றன என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரோஹினிகுமாாி விஜயரட்ன சுட்டிக்காட்டியுள்ளார். ஆா்ப்பாட்டங்களை மேற்கொள்ளும்போது கோவிட் தொற்று ஏற்படுமானால், அநுரதப்புரத்தில் நேற்று இரவு ஜனாதிபதி மற்றும் பிரதமா் தலைமையில் நடத்தப்பட்ட விருந்துபசார நிகழ்வுகளின்போது கோவிட் தொற்று ஏற்படாதா?என்று நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது. |
போரின்போது தமது மண்ணுக்காக, தமது இனத்துக்காக எந்த எதிர்பார்ப்பையும் கருதாது போரிட்டு உயிர்நீத்தவர்களுக்கான நிகழ்வுகளுக்கு இடம்தரவேண்டும். இல்லையேல், இனரீதியான உணர்வுகளால் மக்கள் வீறுகொண்டு எழுவார்கள் என்று தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு இன்று நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளது. தமிழ்த்தேசியக்கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் இந்த விடயத்தை இன்று நாடாளுமன்றத்தின் கவனத்துக்கு கொண்டு வந்தார். |
நாடாளுமன்ற உறுப்பினா் மனோ கணேசன், கோவிட் தொற்றுக்கு உள்ளாகியிருக்கும் நிலையில் எதிர்க்கட்சியினா் முகக்கவங்களை அணியவேண்டும் என்று அமைச்சா் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டார்.
இதன்போது குறுக்கிட்ட எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர்கள், நேற்று ஜனாதிபதி மற்றும் பிரதமர் தலைமையில் இடம்பெற்ற நிகழ்வுகள் மற்றும் இன்று பகல் நடைபெறுகின்ற அரசாங்கத்தின் நிகழ்வுகளின் ஊடாக கோவிட் தொற்றுக்கள் ஏற்படாதா?என்று கேள்வி எழுப்பினர். |
நாட்டின் தலைவரை இன்று மக்கள் திறந்தநிலையில் விமா்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினா் குமார வெல்கம தொிவித்துள்ளார். எனினும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே ஆர் ஜெயவா்த்தன உட்பட்ட ஜனாதிபதிகளை மக்கள் ”பைத்தியம்” என்று விமா்சிக்கவில்லை என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார். அன்றே, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என்று கோாியபோதும் அது செவிமடுக்கப்படவில்லை என்று அவா் குறிப்பிட்டுள்ளார். |
2022 பாதீட்டின் ஊடாக பெருந்தோட்ட தமிழ் மக்கள் மீண்டும் ஒருமுறை அரசாங்கத்தினால் ஏமாற்றப்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் பீல்ட் மாா்ஷல் சரத் பொன்சேகா தொிவித்துள்ளார். |
பாதீட்டில் மக்களின் பிரச்சனைகள் மற்றும் நிவாரணக் கோாிக்கைகள் தீர்க்கப்படவில்லை என்ற விடயத்தை பாா்க்கும்போது அரசாங்கம் தோல்வி அடைந்துள்ளமையை உணரமுடிவதாக நாடாமன்ற உறுப்பினா் நிரோசன் பெரேரா குறிப்பிட்டுள்ளார். இதனை நாடாளுமன்றத்தில் பேசாமல், வீதிகளில் அல்லது பொருட்களை பெற்றுக்கொள்வதற்காக வாிசைகள் நிற்போர் மத்தியில் கேட்டால் தொியவரும் என்று அவர் தொிவித்துள்ளார். |
இலங்கையின் பொருளாதாரத்தை ஊக்குவிக்கும் வகையில் துாதரகங்கள் ஊடாக ஊக்குவிப்பு முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக வெளியுறவு அமைச்சா் ஜிஎல் பீரிஸ் தொிவித்துள்ளார். ஜிஎஸ்பி பிளஸ் என்பது அன்பளிப்பு இல்லை என்று குறிப்பிட்ட அவர், அது நிபந்தனைகளின் அடிப்படையிலேயே கிடைக்கிறது என்று தொிவித்தார். அது கிடைக்காதுபோனால் இலங்கைக்கு நட்டமில்லை. எனினும் இலங்கையில் வாழும் வறுமையால் மக்களையே பாதிக்கும் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. எனவே ஜிஎஸ்பி பிளஸ் சலுகையை ஐரோப்பிய ஒன்றியம் ரத்துச்செய்யமாட்டாது என்று அவர் நம்பிக்கை வெளியிட்டார். |
