"கோட்டாவை ஜனாதிபதியாக்க வேண்டாம் என்று அன்றே கூறினேன்"- குமார வெல்கம
நாட்டின் தலைவரை இன்று மக்கள் திறந்தநிலையில் விமா்சிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தொிவித்துள்ளார்.
எனினும் முன்னாள் ஜனாதிபதிகளான ஜே ஆர் ஜெயவா்த்தன உட்பட்ட ஜனாதிபதிகளை மக்கள் ”பைத்தியம்” என்று விமர்சிக்கவில்லை என்று அவர் இன்று நாடாளுமன்றத்தில் உரையாற்றும்போது குறிப்பிட்டார்.
அன்றே, கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்கவேண்டாம் என்று கோாியபோதும் அது செவிமடுக்கப்படவில்லை.
ஜனாதிபதியாக பதவியேற்கும் ஒருவா், அரசியல் அனுபவம் வாய்ந்த ஒருவராக இருக்கவேண்டும்.
எனினும் தற்போதைய ஜனாதிபதி, பிரதேச சபையில் கூட அங்கம் வகிக்கவில்லை.
அத்துடன் இராணுவத்திலும் அவா் ஒரு பிரிவிலேயே பணியாற்றியதாக குமார வெல்கம குறிப்பிட்டார்.
அன்று ”பைத்தியம்” இல்லாத தினேஸ் குணவர்தனவை ஜனாதிபதி வேட்பாளராக நியமிக்குமாறு தாம் கோாியபோதும் அதுவும் செவிமடுக்கவில்லை என்று குமார் வெல்கம தெரிவித்தார்.
இன்று சோ் (sir) தோல்வியடைந்துள்ளமையால், எல்லோரும் தாமே ஜனாதிபதி என்று கூறுகின்றனர்.
இதனைக் கூறுவதை விட தற்போதுள்ள ஜனாதிபதியை விரட்டவேண்டும் என்றும் அவர் தெரிவித்தார்.
தற்போதையை சூழ்நிலையில் நாடாளுமன்ற உறுப்பினர்கள் நாட்டின் எதிர்காலத்தைப் பற்றி சிந்திக்கவேண்டும்.
இதன் அடிப்படையில் அரசாங்கத்தின் சிரேஷ்ட அரசியல்வாதிகள், எதிா்கட்சியினா், தமிழ்த்தேசியக்கூட்டமைப்பினா், ஜேவிபி உட்பட்டவர்கள் இணைந்து நாட்டுக்கு அவசியமான அரசியலமைப்பு ஒன்றை தயாாிக்கவேண்டும். இல்லையேல் தொடர்ந்தும் நாட்டின் தலைவர்களாக அனுபவமற்றவர்கள் ( பைத்தியங்கள்) பதவியேற்கக்கூடும்.
இதனால் நாட்டின் எதிர்கால சந்ததியினர் பாரிய பிரச்சனைகளுக்கு முகங்கொடுக்கவேண்டியேற்படும் என்றும் குமார வெல்கம குறிப்பிட்டார்.
வங்கிகள் மற்றும் நிதி நிறுவனங்களைப் பொறுத்தவரை கொரோனாவினால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு உாிய நிவாரணங்களை வழங்கவில்லை.
இதேவேளை பாதீட்டில், நாடாளுமன்ற உறுப்பினா்கள் 10 வருடங்கள் உறுப்பினர்களாக அங்கம் வகிக்காதுவிட்டால், ஓய்வூதியம் வழங்கப்படக்கூடாது என்பது ஏற்றுக்கொள்ளக்கூடிய அம்சம் என்று குமார வெல்கம குறிப்பிட்டார்.
இதேவேளை உயிர்த்த ஞாயிறு தாக்குதல்தாரிகளுக்கு சம்பளம் வழங்கிய சாபம் காரணமாகவே இன்று அரசாங்கத்துக்கு பிரச்சனை தொடா்கிறது என்றும் வெல்கம தொிவித்தார்.
அத்துடன் விவசாயிகளுக்கு பசளைகளை வழங்காதுபோனால், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் சாபம் பின்னால் தொடரும் என்று ஜனாதிபதியிடம் தொிவிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.



