அரசாங்கத்திலிருந்து வெளியேறத் தயாராகும் 40 இற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள்! அரசுக்கு அதிர்ச்சி தகவலை கொடுத்த உறுப்பினர்
நீதிமன்ற உத்தரவுகளைக் புறக்கணித்து பொலிஸ் மா அதிபர், நாடாளுமன்ற வரப்பிரசாதத்தை மீறியதாகக் கூறி, நாடாளுமன்றத்தில் இன்று எதிா்க்கட்சியினர் கோசங்களை எழுப்பினர்.
இதன்போது ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் சுலோகங்களை ஏந்தி, ஜனாதிபதிக்கும், அரசாங்கத்துக்கும், அமைச்சர் சரத் வீரசேகரவுக்கும் எதிராகக் கோசங்களை எழுப்பினர்.
ஐக்கிய மக்கள் சக்தியினால் நேற்று மேற்கொள்ளப்பட்ட ஆர்ப்பாட்டத்தின்போது பெரும்பாலான நீதிமன்றங்கள், அதற்கு தடை விதிக்கவில்லை.
எனினும் பொலிஸ் மா அதிபர், நாடடின் அனைத்துப் பகுதிகளிலும் பொலிஸாரை பயன்படுத்தி ஆர்ப்பாட்டத்தை தடுத்ததாக ஐக்கிய மக்கள் சக்தியின் பொதுச் செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது குற்றம் சுமத்தினார்.
மக்கள் ஆர்ப்பாட்டத்தை பொலிஸாரைக் கொண்டு தடுக்கமுடியாது என்றும் அவர் எச்சரித்தார். அரசாங்கத்தில் இருந்து இன்று 40 உறுப்பினர்களுக்கும் அதிகமானோர் வெளியேறத் தயாராகி வருகின்றனர்.
இந்த நிலையில் அரசாங்கத்தை காப்பாற்ற எவரும் இல்லை என்றும் அவர் தொிவித்துள்ளார்.
5 வருடங்களுக்கு இந்த அரசாங்கத்தை ஆட்சி செய்ய விடப்போவதில்லை என்றும் ரஞ்சித் மத்தும பண்டார இதன்போது எச்சாித்தார்.
அமைச்சர் பசில் ராஜபக்சவும், மத்திய வங்கியின் ஆளுநர் அஜித் நிவாட் கப்பராலும் நாட்டில் மீதியாக இருப்பதையும் இல்லாது செய்துவிடுவர் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.






கொழும்பில் குடியிருப்பு தொகுதியில் தீ விபத்து - சிக்கிய 20க்கும் மேற்பட்ட எரிவாயு சிலிண்டர்கள் - வெளியான காரணம்
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விவகாரம்! பின்னணியில் மறைந்துள்ள முக்கிய சூத்திரதாரிகள் உள்ளிட்ட சதியாளர்களின் பட்டியல்
அடுத்த 24 மணி நேரத்திற்குள் தீவிரமடையும் வானிலை: பல பிரதேச செயலகப்பிரிவுகளுக்கு வெள்ளப்பெருக்கு எச்சரிக்கை!
சூப்பர் எல் நினோவால் கதிகலங்கப் போகும் அவுஸ்திரேலியா... நூற்றுக்கணக்கானோர் இறக்கக்கூடும் News Lankasri
நாங்கள் உயிர்வாழ்வதற்கு ஏன் கடவுள் எங்களைத் தேர்ந்தெடுத்தார்? நேபாளத்தில் தப்பிய தம்பதி உருக்கம் News Lankasri
யூத் படத்தை தொடர்ந்து கென் கருணாஸ் நாயகனாக நடிக்கும் அடுத்தப்படம்... இயக்குனர் யார் தெரியுமா? Cineulagam