மக்கள் மீது சுமையை ஏற்றும் பாதீட்டை சமர்ப்பித்த பசில் - நாடாளுமன்றத்தில் குற்றச்சாட்டு
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
நாடாளுமன்ற உறுப்பினா் வீ ராதாகிருஸ்ணன் 2022 ஆண்டுக்கான பாதீட்டில் உள்ள வாா்த்தைகள் அழகாகக் கூறப்பட்டுள்ளன. எனினும் செலவுகளுக்கான வருமானங்கள் தொடா்பில் பாதீட்டில் எதுவும் இல்லை. மலையக பெருந்தோட்டங்களில் லயன் குடியிருப்புகளை அகற்றி வீடுகளை அமைப்பதற்கான ஒதுக்கப்பட்டுள்ள தொகையில் வருடம் ஒன்றுக்கு 100 வீடுகளை மாத்திரமே நிா்மாணிக்கமுடியும். மக்கள் எதிர்கொள்ளும் நடைமுறைப் பொருளாதாரப்பிரச்சனைக்கு தீா்வுகள் இல்லை. மலையக மக்களுக்கான உாிய திட்டங்கள் மேற்கொள்ளப்படவேண்டும். மலையக காணிகளை வெளியாருக்கு வழங்கவேண்டாம். நுவரெலிய மாவட்டத்தின் லிந்துலை பகுதியில் கிறிஸ்தவ மதச் சிலை ஒன்று உடைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் உாிய நடவடிக்கை எடுக்கப்படவேண்டும். |
நாடாளுமன்ற உறுப்பினா் எம். ராமேஸ்வரன் நிதியமைச்சா் பசில் ராஜபக்சவின் பாதீடு, மக்கள் மீது சுமையை சுமத்தாத பாதீடாகும். பெருந்தோட்ட வீடமைப்புக்காக 500 மில்லியன் ரூபா ஒதுக்கீடு மாத்திரமே செய்யப்பட்டுள்ளதாக பல நாடாளுமன்ற உறுப்பினா்கள் தொிவித்துள்ளனா். எனினும் ஏற்கனவே தோட்ட வீடமைப்புக்காக 2000 மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. |
நாடாளுமன்ற உறுப்பினா் ரோஹன திசாநாயக்க
தமிழ் மக்களுக்காக மஹிந்த ராஜபக்சவின் அரசாங்கம் மற்றும் தற்போதைய அரசாங்கம் பல சேவைகளை செய்து வருகிறது. இதனை எதிா்க்கட்சி இதுவரை தெரிந்துக்கொள்ளவில்லை. |