எதிர்க்கட்சிகளின் செயற்பாடு காரணமாகவே மூன்று மாதங்களுக்குள் பூஸ்டா் தடுப்பூசி
2022ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டம் நிதி அமைச்சர் பசில் ராஜபக்சவினால் கடந்த வெள்ளிக்கிழமை சபையில் முன்வைக்கப்பட்டுள்ள நிலையில் அதற்கான விவாதங்கள் தற்போது நாடாளுமன்றத்தில் இடம்பெற்று வருகின்றன.
குறித்த வரவு செலவுத் திட்டம் தொடர்பாக, ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நிதிகள் தொடர்பாக ஆதரவாகவும், எதிராகவும் விமர்சன ரீதியான கருத்துக்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன.
அந்த வகையில், வரவு செலவுத் திட்டம் தொடர்பான இன்றைய நாடாளுமன்ற விவாதத்தின் போது கூறப்பட்ட கருத்துக்களின் தொகுப்பு இதோ,
அமைச்சா் தயாசிறி ஜெயசேகர 2022 ஆம் ஆண்டு பாதீட்டில் பெண்களுக்காக பாாிய நிதியொதுக்கீடுகள் செய்யப்பட்டுள்ளன. நேரடியாக பெண்களுக்கான திட்டங்களுக்காக குறைந்த ஒதுக்கீடுகள் செய்யப்பட்ட போதும், ஏனைய அமைச்சுக்கள் ஊடாக பெண்களுக்கான அதிக ஒதுக்கீடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன. |
ராஜாங்க அமைச்சா் சன்ன ஜெயசுமன கொரோனா தடுப்பூசிகள் மற்றும் கொரோனாப் பரவல் விடயங்களில் இலங்கை சிறப்பாக செயற்பட்டு வருகிறது. முன்னா் இரண்டு தடுப்பூசிகள் வழங்கப்பட்டு 6 மாதங்களிலேயே மூன்றாவது பூஸ்டர் தடுப்பூசி வழங்கப்பட்டு வந்தது. எனினும் எதிர்க்கட்சியின் ஆா்ப்பாட்டம் உட்பட்ட செயற்பாடு காரணமாக நாளை முதல் 60 வயதுக்கும் மேற்பட்டவா்களுக்கு இரண்டு தடுப்பூசிகளை பெற்றுக்கொண்ட மூன்று மாதங்கள் நிறைவடைந்தநிலையில் பூஸ்டர் தடுப்பூசிகள் வழங்கப்படவுள்ளன. |